ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | |
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | ஸ்டீவ் சிமித்[1] |
பயிற்றுநர் | சுடீபன் பிளெமிங் |
உரிமையாளர் | சஞ்சீவ் கோயங்கா |
அணித் தகவல் | |
நகரம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
நிறங்கள் | |
உருவாக்கம் | 2016 |
Dissolved | 2017 |
உள்ளக அரங்கம் | மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே |
அதிகாரபூர்வ இணையதளம்: | www |
![]() |
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (சுருக்கமாக RPS) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பருவம் மட்டும் விளையாடும் துடுப்பாட்ட அணி ஆகும்.[2] இது புனே, மகாராட்டிர நகரத்தை மையமாக கொண்டுள்ளது. தவறான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர்களை கொண்ட இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவற்றின் நிக்குதல் காரணமாக இரு வருடம் அந்த அணிகள் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட இயலாது. அவற்றின் இடத்தை நிரப்ப இந்த அணி மற்றும் குஜராத் லயன்சு அணி விளையாடியது. இந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஆவார்.[3] 2018 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் திரும்பிய பிறகு, ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு மற்றும் குஜராத் லயன்சு அணிகள் கலைக்கப்பட்டது.