ரோசன் லால் நாக்ரத் | |
---|---|
![]() 1964இல் ரோசன் | |
பிறப்பு | ரோசன் லால் நாக்ரத் 14 சூலை 1917 குஜ்ரன்வாலா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 நவம்பர் 1967 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 50)
படித்த கல்வி நிறுவனங்கள் | மாரிஸ் கல்லூரி |
வாழ்க்கைத் துணை | இரா ரோசன் |
பிள்ளைகள் |
|
இசை வாழ்க்கை | |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) |
|
இசைத்துறையில் | 1948-1967 |
இணைந்த செயற்பாடுகள் | ராஜேஷ் ரோஷன் |
ரோசன் லால் நாக்ரத் (Roshan Lal Nagrath) (14 ஜூலை 1917 - 16 நவம்பர் 1967), பொதுவாக ரோசன் என்று அறியப்படும் இவர், ஒரு இந்திய எஸ்ராஜ் (தில்ரூபாவின் நவீன மாறுபாடு) இசைக் கலைஞரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். நடிகரும் மற்றும் திரைப்பட இயக்குநர் ராகேஷ் ரோஷன் இவரது மகனாவார். மேலும் இசை அமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் மற்றும் கிருத்திக் ரோஷன் ஆகிய இருவருக்கும் தந்தைவழி தாத்தா ஆவார்.
ரோசன் 1917 ஜூலை 14 அன்று பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் (இப்போது பாக்கித்தானில் உள்ளது) குஜ்ரன்வாலா நகரத்தில் ஒரு பஞ்சாபி சரஸ்வத் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.[1][2] இளம் வயதிலேயே இசைப் பயிற்சிகளைத் தொடங்கிய ரோசன், பின்னர் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணத்தில் இருக்கும் பண்டிட் ஸ்ரீகிருஷ்ணா நாராயண் ரத்தன்சங்கர் நிறுவிய மாரிஸ் கல்லூரியில் (நிறுவனத்தின் முதல்வர்) கீழும் பயின்றார். மைகாரின் புகழ்பெற்ற சரோத் இசைக்கலைஞரான அலாவுதீன் கானின் வழிகாட்டுதலின் கீழ் ரோசன் ஒரு திறமையான சரோத் இசைக் கலைஞரானார். 1940 ஆம் ஆண்டில், புது தில்லி, அனைத்திந்திய வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்/இசைக் கலைஞராகவும் இருந்த கவாஜா குர்சித் அன்வர், ரோசனை தான் இசைக்கும் கருவியான எஸ்ராஜில் பயிற்சி அளித்து நிலையத்தின் பணியாளர் கலைஞராக நியமித்தார். பின்னர், மும்பையில் ஒரு இசையமைப்பாளார் ஆவதற்காக 1948 இல் வானொலியின் பணியை கைவிட்டார்.[2]
1948 ஆம் ஆண்டில், பாலிவுட் திரைப்பட இசை இயக்குநராக மும்பை வந்த ரோசன், சிங்கார் (1949) படத்தில் இசையமைப்பாளர் கவாஜா குர்சித் அன்வாரின் உதவியாளராக சேர்ந்தார். பின்னர், தயாரிப்பாளர்-இயக்குநர் கிதார் சர்மா தனது நேகி அவுர் பாடி திரைப்படத்தில் இசையமைக்கும் பணியை ரோசனுக்கு வழங்கினார்.[2] இந்தப் படம் தோல்வியடைந்தாலும், தனது அடுத்த படத்தில் கிதார் சர்மா இவருக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கினார். பாவ்ரே நைன் (1950) படத்தின் மூலம் ரோசன் இந்தித் திரைப்படயுலகின் வெற்றி பெற்ற இசையமைப்பாளராக மாறினார்.[2][3]
1950களின் முற்பகுதியில், பாடகர்களான முகமது ரபி, முகேஷ் மற்றும் தலத் மஹ்மூத் ஆகியோருடன் ரோசன் பணியாற்றினார். 1950களில் தொடங்கி மல்ஹார் (1951), ஷிஷம் மற்றும் அன்ஹோனி (1952) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இந்த நேரத்தில், மீரா பஜன் பாடலுக்கும் இசையமைத்தார். பின்னர்,நௌபஹார் (1952) திரைப்படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய "எயிரி மைன் தோ பிரேம் திவானி மேரா தர்த் நா ஜானே கோயி" என்ற வெற்றி பாடலுக்கும் இசையமைத்தார்.[2]
இவர் ஒருபோதும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்திய திரைப்படத் துறையில் பாடலாசிரியர்களான இந்திவார் மற்றும் ஆனந்த் பக்சி ஆகியோருக்கு முதல் வாய்ப்புகளை இவர் வழங்கினார்.
ரோசன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாள்பட்ட இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். 1967 நவம்பர் 16 அன்று தனது 50 வயதில் இதய அடைப்பு காரணமாக இறந்தார்.[2]