ரோசா இல்தா ராமோசு (Rosa Hilda Ramos) கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசைப் பெற்ற இரண்டாவது புவேர்ட்டோ ரிக்கன் குடிமகனாவார். இவர் தனது சொந்த ஊரான கட்டானோ, புவேர்ட்டோ ரிக்கோவை தளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்ற ஓர் இல்லத்தரசி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது உலகெங்கிலும் உள்ள அடிமட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதாகும். பசுமை நோபல் பரிசு என்றும் இது பிரபலமாக அறியப்படுகிறது.[1]
புவேர்ட்டோ ரிக்கோவின் கட்டானோவில் உள்ள மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் பாதிப்பிலிருந்து லாசு குச்சரில்லாசு சதுப்புநிலத்தை வளர்ச்சியினால் ஏற்பட்டும் அழிவிலிருந்து காப்பாற்ற உதவியதற்காக ராமோசுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இச்சதுப்பு நிலம் இப்பகுதியின் கடைசி திறந்தவெளி மற்றும் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.
அரசாங்க நிறுவனமான புவேர்ட்டோ ரிக்கோ மின்சார சக்தி ஆணையத்தை எதிர்த்து இப்பகுதியின் முக்கிய காற்று மாசுபாட்டையும் இவர் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மாசுபடுத்திகளின் அளவை வியத்தகு முறையில் குறைக்க பொது பயன்பாட்டை கட்டாயப்படுத்தி 7 மில்லியன் டாலர் அபராதம் செலுத்துமாறு ஆணையத்தை ராமோசு கட்டாயப்படுத்தினார்.[2]
2008 கோல்டுமேன் சுற்றுச்சூழல் பரிசு 150,000 நாணய மானியம், ஏப்ரல் 14, 2008 அன்று கலிபோர்னியாவின் சான் பிரான்சிசுகோவில் ஏழு பெறுநர்களுக்கு வழங்கப்பட்டது.