ரோசா ஜெனோனி | |
---|---|
பிறப்பு | 1867 திரானோ, இத்தாலி |
இறப்பு | 1954 வாரிசே, இத்தாலி |
அறியப்படுவது | பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுபவர் அமைதிவாதி இத்தாலியின் ஆடை வடிவமைப்பாளர் |
ரோசா ஜெனோனி ( Rosa Genoni ) (1867-1954) ஒரு இத்தாலிய தையல்காரரும், ஆடை வடிவமைப்பாளரும், ஆசிரியரும், பெண்ணியவாதியும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடுபவரும் ஆவார். இவர் தனது தனக்ரா உடை போன்ற புதுமையான வடிவமைப்புகளுடன், வெற்றிகரமான ஆடை வடிவமைப்பு வாழ்க்கையைப் பெற்றிருந்தார். 1915 ஏப்ரல் 28 - மே 10, நெதர்லாந்தின் டென் ஹாக்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் இத்தாலியின் பிரதிநிதியாக இருந்தார். இத்தாலியை ஒரு ஆடை அலங்கார வடிவைப்பின் தலைமையகமாக மாற்றுவதற்கான இவரது விருப்பமும் முயற்சிகளும் பாசிசத்தின் கீழ் முறியடிக்கப்பட்டன.
ஜேன் ஆடம்ஸ் மற்றும் ரோசிகா இசுவிம்மர் உட்பட பல குறிப்பிடத்தக்க பெண்களுடன் சேர்ந்து , 28 ஏப்ரல் - 1 மே 1915, நெதர்லாந்தின் டென் ஹாக்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார். [1] மாநாட்டிலிருந்த ஒரே இத்தாலிய பிரதிநிதியான இவர், பல இத்தாலிய வாக்குரிமையாளர் மற்றும் அமைதிவாத அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1]
ரோசா ஜெனோனி, ஆஸ்திரிய தத்துவஞானி ருடால்ஃப் இசுடெய்னரின் ஆன்மீக போதனைகளில் ஆர்வமுள்ள ஆர்வமுள்ள மானுடவியல் நிபுணர் ஆவார். அவர் தனது உடன்பிறந்தவர்களில் இளையவரான இத்தாலிய கலைஞரான எர்னஸ்டோ ஜெனோனியை மிலனில் நடந்த மானுடவியல் சங்க கூட்டங்களுக்கு அறிமுகப்படுத்தினார். [2] எர்னஸ்டோ பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார், அங்கு இவர் மேற்கு ஆஸ்திரேலியாவில் விவசாயம், மானுடவியல் ஆகியவற்றை தனது சகோதரர்களை அறிமுகப்படுத்தினார். முதல் மானுடவியல் குழுவை இணைத்து, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் முதல் உயிரியக்கவியல் பண்ணையை நிறுவினார். ருடால்ஃப் இசுடெய்னரின் போதனைகளை ஆஸ்திரேலியாவிற்கு பரப்புவதில் ரோசாவுக்கு முக்கிய பங்கு இருந்தது. [2]