ரோசி சேனாநாயக்க | |
---|---|
ரோசி சேனாநாயக்க (வலது) தனது மகளுடன் | |
கொழும்பு மேயர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2018 | |
பிரதம அமைச்சரின் செய்தித் தொடர்பாளர், பிரதம அமைச்சகத்தின் துணைத்தலைவர் | |
பதவியில் 15 செப்டம்பர் 2015 – 19 மார்ச் 2018 | |
பிரதமர் | ரணில் விக்ரமசிங்க |
குழந்தைகள் விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் | |
பதவியில் 12 ஜனவரி 2015 – 17 ஆகஸ்ட் 2015 | |
இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் | |
பதவியில் 10 ஏப்ரல் 2010 – 26 ஜூன் 2015 | |
இலங்கையின் மேற்கு பிராந்தியத்துக்கான எதிர்கட்சித் தலைவர் | |
பதவியில் 2009–2010 | |
இலங்கையின் மலேசியாவுக்கான உயர் ஆணையாளர் | |
பதவியில் 2001–2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1958 கொழும்பு, இலங்கை டொமினியன் |
தேசியம் | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | அதுல சேனநாயக்க |
பிள்ளைகள் | கனிஷ்கா திசக்யா ராத்யா |
பணி | அரசியல்வாதி |
தொழில் | பதவியில் |
ரோசி சேனாநாயக்க | |
---|---|
பட்டம் | திருமதி
உலக அழகி 1985, ஆசிய பசிபிக் பன்னாட்டு அழகி, 1981, இலங்கை அழகி 1980 |
ரோசி சேனாநாயக்க (Rosy Senanayake, சிங்களம்: රෝසි සේනානායක) என்றழைக்கப்படும் பெர்னதின் ரோஸ் சேனாநாயக்க, (Bernadine Rose Senanayake, பிறப்பு: சனவரி 5, 1958),[1]) இலங்கையின் அரசியல்வாதியும்[2] தற்பொழுது கொழும்பு மாநகர முதல்வரும் ஆவார்.[3][4] இவர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.[5] ரோசி சேனாநாயக்க அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டிலுள்ள குழந்தைகள் விவகாரங்களுக்கான துறையில் முன்னாள் மாநில அமைச்சராக இருந்தார். இவர் சமூக ஆர்வலர்; முன்னாள் அழகுராணி; தற்பொழுதைய இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்; மேலும் இவர் இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தின் எதிர்கட்சிக் குழுவின் தலைவராகவும் இருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேற்கு கொழும்பு வாக்காளர் தொகுதியின் முதன்மை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். ரோசி சேனாநாயகே மலேசியாவுக்கான இலங்கை உயர் ஆணையாளராகப் பணியாற்றியுள்ளார்.[6] ஐக்கிய நாடுகள் சபையில் மக்களுக்கான நிதிக்குழுவின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருந்தார். பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கிடையிலும், எதிர்ப்புகளுக்கிடையேயும் சிறந்த முறையில் செயல்படக்கூடியவராக ரோசி சேனநாயகே அறியப்படுகிறார்.
1980 இல் உலக அழகிப் போட்டியில் இலங்கை அழகியாகப் போட்டியிட்டார். 1981 இல் ஆசியா பசிபிக் பன்னாட்டு அழகிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 இல் திருமதி உலக அழகிப்போட்டி நடைபெற்ற போது, ரோசி சேனநாயகே அதில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
ரோசி சேனாநாயக தனது வாழ்க்கை முழுவதையும் இலங்கையில் தொழில் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக உலக வர்த்தகத்திற்கான இலங்கை வணிகத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் வயது வந்தோர் மற்றும் பெண்களுக்கான உரிமைகளுக்காக இவர் பணியாற்றுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக இருந்த சமயத்தில் தேசிய இளைஞர் மன்றத்தின் வழியே இளைஞர்கள் மற்றும் இலங்கையின் புலம் பெயர்ந்த பெண்களின் இனப்பெருக்க உடல்நலம் தொடர்பான சேவைகளை ஊக்குவிக்கும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[8] சேனாநாயக்க தனியார் துறையின் ஒத்துழைப்புடன் தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் இனப்பெருக்க உடல் நலம் தொடர்பான சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். சமீபமாக இனப்பெருக்க சுகாதாராச் சேவைகள் பற்றிய ஒரு படத்தில் நடித்துள்ளார். இவருடைய புகழ்பெற்ற பகல் நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’எலியா’ மூலம் இலங்கையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒர் அடையாளச் சின்னமாக விளங்குகிறார்.