ரோசெல் பாட்கர் (Rochelle Potkar பிறப்பு 9 மார்ச் 1979) ஓர் இந்திய, மும்பை, மகாராஷ்டிராவினை, பூர்வீகமாகக் கொண்ட புனைகதைஎழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.[1][2] இவரது முதல் புத்தகம், தெ அரித்மெடிக் ஆஃப் பிரீட்சு அண்ட் அதர் இசுட்டோரிசுதி டிஜிட்டல் புக் ஆஃப் தி இயர் விருதினை 2014 ஆம் ஆண்டில் பெற்றது.[3] இந்த விருது பப்ளிஷிங் நெக்ஸ்ட் மூலம் வழங்கப்பட்டது.இவரது முதல் கவிதைத் தொகுப்பான ஃபோர் டிகிரீசு ஆஃப் செபரேசன் 2014 ஆம் ஆண்டில் வெளியானது.[4] இவர் அயோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்துத் திட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தில் எழுத்துத் திட்டத்திலும் இவர் இருந்தார்.[5][6][7]
இவர் இசுட்டார்லிங் பல்கலைக் கழகம், இசுக்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் , 2017 இல் எழுத்தாளர் சார்லஸ் வாலசின் சக ஊழியராக இருந்தார்.[8] மும்பையின் அமெரிக்க துணைத் தூதரகத்தின் திட்டமான "ஆர்க்ஸ்-ஆஃப்-எ-சர்கிள் ஆர்டிட்சு" உறைவிட திட்டத்தின் இணை நிறுவனர் ஆவார்.[9]
ரோசெல்லே பாட்கர் கல்யாணில் ஒரு கோவா கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். பின்னர் இவர் மும்பையில் உள்ள ஒரு கோவன் இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார்.[10]
இவரது முதல் புத்தகம், தெ அரித்மெடிக் ஆஃப் பிரீட்சு அண்ட் அதர் இசுட்டோரிசுதி டிஜிட்டல் புக் ஆஃப் தி இயர் விருதினை 2014 ஆம் ஆண்டில் கோவாவில் பெற்றது.[12]ஃபார் எனாஃப் ஈஸ்ட், சீன் அண்ட் வெர்டன், தி மெடுல்லா ரிவியூ, நாசாவ் ரிவியூ, விமன் ரைட்டர்சு, ரைட்டர்சு ஹப்,பிவில்டரிங் இசுட்டோரிசு, கண்டராவில்லே, மியூஸ் இந்தியா, மரிசுவானா டைரிசு, பெங்களூர் ரிவியூ, ரிவெஞ்ச் இங்க், நிவாசினி ஆகிய உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன., இவருடைய கருப்பொருள்கள் பொதுவாக உறவுகளைச் சுற்றி இருக்கும். இவர் யதார்த்தம் மற்றும் இயல்பு கடந்த தொடர்பான புனைகதைகளை எழுதுகிறார்.
2013 ஆம் ஆண்டில் அயோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்துத் திட்டத்தால் வழங்கப்பட்ட ஒரு மேம்பட்ட கருத்தரங்கை இவர் தொலைதூரக் கல்வி மூலம் முடித்தார். 2015 ஆம் ஆண்டில் அயோவா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச எழுத்துத் திட்டத்தில் எழுத்தாளராக அழைக்கப்பட்டார்.[13][14][15][16][17] பாட்கர் தனது "தெ இலிவ்சு ஆஃப் தெ தியோதர்" என்ற கதைக்காக ஒப்பன் ரோடு ரிவியூ பரிசு 2016 ஐ வென்றார்.[18] இவரது கதை 'நாய்சு' எக்ஸ்பவுண்ட் இதழில்12, 2017 இல் வெளிவந்தது.[19]
மூட் இண்டிகோ,இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை, மல்கார் (விழா), செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி, ஸ்பெக்ட்ரம்- தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி, கார்கர் மற்றும் அமெரிக்கன் நூலக்ம் ஆகியவற்றில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கும் நடுவராக இருந்துள்ளார்.[20] இவர் ஒரு முக்கிய எழுத்தாளராக ஹூக் ப்ளூ என்று அழைக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.