![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
15274-78-9 ![]() | |
ChemSpider | 140097 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 91886288 91886287 |
| |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரோடியம்(III) சல்பேட்டு (Rhodium(III) sulfate) என்பது Rh2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரோடியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இது சிவப்புநிற படிகத் திண்மமாகக் காணப்படுகிறது.[1]
1929 ஆம் ஆண்டு ரோடியம்(III) ஐதராக்சைடு மற்றும் கந்தக அமிலம் ஆகியவற்றை சேர்த்து வினை புரியச் செய்து ரோடியம்(III) சல்பேட்டை உற்பத்தி செய்வதற்கான முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மஞ்சள் நிறத்தில் டெட்ராடெக்காநீரேற்று ஒன்று மற்றும் சிவப்பு நிற டெட்ராநீரேற்று ஒன்று என இரண்டு வெவ்வேறு வகையான நீரேற்றுகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கட்டமைப்பு ஆதாரம் இல்லாததால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அறுநீரேற்று மற்றும் டெட்ராடெக்காநீரேற்று ஆகியவற்றின் மீது கூடுதலாக எக்சுகதிர் விளிம்பு விலகல் ஆட்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2009 ஆம் ஆண்டில் முதல் கட்டமைப்புத் தெளிவுபடுத்தல்கள் செய்யப்பட்டதன் மூலம் இச்சேர்மத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் 2016 ஆம் ஆண்டில் மிகவும் திறமையான உற்பத்தி முறை அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் ரோடியம் (III) சல்பேட்டை உருவாக்க ரோடியம் உலோகம் மற்றும் கந்தக அமிலம் பயன்படுத்தப்பட்டன. இரண்டு சேர்மங்களூம் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 400 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் நீரிலி வடிவம் உருவாகியது. இதே கல்வை 475 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் இருநீரேற்று உருவானது.