இனங்காட்டிகள் | |
---|---|
12067-06-0 | |
ChemSpider | 23349348 |
பண்புகள் | |
Rh2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 301.99 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம் |
அடர்த்தி | 6.46 கி/செ.மீ−3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரோடியம்(III) சல்பைடு (Rhodium(III) sulphide) என்பது (Rh2S3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையாது.
தனிமநிலை ரோடியத்தை கந்தகத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் ரோடியம்(III) சல்பைடைத் தயாரிக்கலாம். புரோமினை கடத்தும் முகவராகப் பயன்படுத்தி வேதியியல் ஆவி கடத்தல் முறையில் படிகங்கள் வளர்ச்சியடைகின்றன. இச்சேர்மத்தின் கட்டமைப்பு எண்முக ரோடிய மையங்களாலும் நாண்முகி வடிவ கந்தக மையங்களாலும் ஆக்கப்பட்டுள்ளன. மூடிய Rh-Rh தொடர்புகள் ஏதும் மூலக்கூறில் காணப்படவில்லை[1] . Rh2Se3 மற்றும் Ir2S3 ஆகிய இரண்டு சேர்மங்களும் ரோடியம்(III) சல்பைடின் கட்டமைப்பை ஒத்த அதே கட்டமைப்பில் உள்ளன.