ரோடியம்(III) பெர்குளோரேட்டு

ரோடியம்(III) பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/3ClHO4.Rh/c3*2-1(3,4)5;/h3*(H,2,3,4,5);/q;;;+3/p-3
    Key: LCAWZYUJRNVLIG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 21688474
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Rh+3]
பண்புகள்
[Rh(H2O)6](ClO4)3
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ரோடியம்(III) பெர்குளோரேட்டு (Rhodium(III) perchlorate) என்பது Rh(H2O)6(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீருறிஞ்சும் தன்மை கொண்ட இவ்வுப்பு மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. ரோடியம்(III) பெர்குளோரேட்டானது மூன்று நேர்மின் அயனி நீரணைவு [Rh(H2O)6]3+ சேர்மத்தின் பெர்குளோரேட்டு உப்பாகும். நீரேற்றப்பட்ட ரோடியம்(III) குளோரைடுடன் பெர்குளோரிக் அமிலத்தை சேர்த்து உயர் வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் ரோடியம்(III) பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]

[Rh(H2O)6]Cl3 + 3 HClO4 → [Rh(H2O)6](ClO4)3 + 3 HCl

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ayres, Gilbert H.; Forrester, John S. (1957). "The Preparation of Rhodium(III) Perchlorate Hexahydrate". Journal of Inorganic and Nuclear Chemistry 3: 365-366. doi:10.1016/0022-1902(57)80042-6.