ரோதி என்பவர் புதிய ஏற்பாட்டில் குறிக்கப்படும் நபர் ஆவார். இவர் பணிகள் 12:12-15இல் மட்டுமே குறிக்கப்படுகின்றார். இவரின் பெயருக்கு உரோசா என்பது பொருள்.[1] இவர் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் பணிப்பெண் ஆவார். புனித பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டப்பின்பு மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே அவர் வெளிக்கதவைத் தட்டியபோது ரோதி தட்டியது யாரெனப் பார்க்க வந்தார். அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, "பேதுரு வாயில் அருகே நிற்கிறார்" என்று அறிவித்தார். அவர்கள் அவரை நம்பவில்லை. ஆனால் அவர் வலியுறுத்திக் கூறியதால் அவர்கள், அது அவருடைய வானதூதராய் இருக்கலாம் என்றார்கள். பேதுரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்ததால் அவர்கள் கதவைத் திறந்தார்கள்.
விவிலிய விளக்க உரையாளர் பலர் இந்த நிகழ்வு நகைச்சுவையுடையதாக விவரிக்கின்றனர்.[2][3]