ரோஸ்மா மன்சூர் Rosmah Mansor | |
---|---|
![]() ரோஸ்மா மன்சூர் (2010) | |
7-ஆவது மலேசிய பிரதமரின் மனைவி | |
' 3 ஏப்ரல் 2009 – 9 மே 2018 | |
ஆட்சியாளர்கள் | சுல்தான் மிசான் அபிதீன் சுல்தான் அப்துல் ஆலிம் சுல்தான் ஐந்தாம் முகமது |
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | ஜீன் அப்துல்லா |
பின்னவர் | சித்தி அம்சா முகமட் அலி |
மலேசிய துணைப் பிரதமரின் மனைவி | |
' 7 சனவரி 2003 – 3 ஏப்ரல் 2009 | |
ஆட்சியாளர்கள் | பெர்லிஸ் சிராஜுதீன் சுல்தான் மிசான் அபிதீன் |
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | எண்டன் மஹ்மூத் |
பின்னவர் | நூரைனி அப்துல் ரகுமான் |
சிலாங்கூர் பலகலைக்கழக வேந்தர் | |
பதவியில் பிப்ரவரி 2006 – பிப்ரவரி 2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Rosmah binti Mansor 10 திசம்பர் 1951 கோலா பிலா, நெகிரி செம்பிலான், மலாயா கூட்டமைப்பு (தற்போது மலேசியா) |
துணைவர்(கள்) | அப்துல் அசீஸ் நோங் சிக் (div.
நஜீப் ரசாக் (m. 1987) |
பிள்ளைகள் | 4 (ரிசா அசீஸ்) |
கல்வி | துங்கு குர்ஷியா கல்லூரி |
முன்னாள் மாணவர் | |
டத்தோ ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் (ஆங்கிலம்: Dato’ Sri Hajah Rosmah binti Mansor; சாவி: روسمه بنت منصور ) பிறப்பு: சூலை 23, 1953) என்பவர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களின் இரண்டாவது மனைவி ஆவார். இவரின் கணவரைப் போலவே, இவரும் ஊழலில் (1MDB) சிக்கினார்.
1 செப்டம்பர் 2022 அன்று, மலேசியா, சரவாக் கிராமப்புறப் பள்ளிகளில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை நிறைவேற்றுவதில், இவர் ஊழல் செய்ததாகக் கண்டறியப்பட்டு, இவருக்கு $303 மில்லியன் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[1][2]
ரோஸ்மா தன் இடைநிலைக் கல்வியை நெகிரி செம்பிலான் துங்கு குர்ஷியா கல்லூரியில் பெற்றார்.[3]
ரோஸ்மா, முன்பு அப்துல் அசீஸ் நோங் சிக் (Abdul Aziz Nong Chik) என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரிசா அசீஸ் மற்றும் அசுரின் சோரயா (Azrene Soraya) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1987-இல், அவர் நஜீப் ரசாக்கை மணந்தார். அவர்களுக்கு நூரியானா நசுவா (Nooryana Najwa) மற்றும் முகமட் நோராடமான் (Mohd Norashman) எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்; மேலும் ரோஸ்மா சிறுவயதில் இருந்தே சேமித்ததாகக் கூறி ஒரு பெரிய அளவிலான சொத்துகளையும் சேர்த்துள்ளார்.[4][5]
நஜீப் ரசாக் ஆட்சியில் இருந்தபோது ரோஸ்மா மற்றும் அவருடைய கணவரின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பரமான பொருட்களை வாங்கிக் குவித்த வாழ்வியல் முறை; மலேசிய மக்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியது.[6][7][8]
2018 மலேசியப் பொதுத் தேர்தலில் அவருடைய கணவரின் தோல்வியைத் தொடர்ந்து, இருவரும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த விசாரணையின் மூலமாக $7.5 பில்லியன், ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் அல்லது 1எம்டிபி (1Malaysia Development Berhad) (1MDB) நிதியில் இருந்து காணாமல் போனது தெரிய வந்தது.[9]
12 மே 2018 அன்று, இவருடைய கணவரும் முன்னாள் பிரதமருமான நஜீப் ரசாக் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கோலாலம்பூருக்கு அருகிலுள்ள ஒரு வானூர்தி நிலையத்திலிருந்து ஜகார்த்தாவில் உள்ள அலிம் பெர்டனகுசுமா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு (Halim Perdanakusuma International Airport) ஒரு தனியார் வானூர்தியின் மூலமாக புறப்படத் திட்டமிட்டு இருந்தனர்.[10]
அந்த வானூர்தியின் பயணிகளாக நஜீப் ரசாக் மற்றும் ரோஸ்மா என்று பெயரிடப்பட்டு இருந்தது. அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கட்டளையின் பேரில், மலேசிய குடிவரவு துறை ரோஸ்மாவிற்கும்; அவரின் கணவர் நஜீப் ரசாக்கிற்கும்; பயணத் தடை விதித்து, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்தது.[11][12][13]
2018 மே 16 முதல், 1எம்டிபி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ரோஸ்மா மற்றும் நஜிப் ஆகிய இருவருக்கும் தொடர்புடைய ஆறு சொத்துக்களை அரச மலேசிய காவல் துறை சோதனையிட்டது.
அந்தச் சோதனையின் போது உயர் ரகக் கைப்பைகள் நிரப்பப்பட்ட 284 பெட்டிகள்; பல நாடுகளைச் சேர்ந்த பண நோட்டுகள்; போன்றவை 72 பெரிய பயண மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களையும் அரச மலேசிய காவல் துறையினர் கைப்பற்றினர்.
அமெரிக்க டாலர் US$273 மில்லியன் மதிப்பிலான பொருட்களைக் கைப்பற்றியதாக மலேசிய காவல்துறை ஆணையர் உறுதிப்படுத்தினார்.[14][15] மலேசிய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கைப்பற்றல் என காவல்துறை விவரித்துள்ளது.[16]
1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய அவரின் கணவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ரோஸ்மாவுக்கு மூன்று முறை அழைப்பாணை விடுத்தது.
4 அக்டோபர் 2018 அன்று; பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (Anti-Money Laundering, Anti-Terrorism and Financing and Proceeds of Unlawful Activities Act) கீழ் மலேசிய குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் மலேசிய ரிங்கிட் MYR 7 மில்லியன் சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான 17 குற்றச்சாட்டுகளை ரோஸ்மா ஒப்புக்கொண்டார்.
மலேசிய குற்றவியல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு, மலேசிய ரிங்கிட் MYR2 மில்லியன் பிணையம் நிர்ணயித்தது; மற்றும் அவருடைய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும்; சாட்சிகள் எவரையும் அணுகக்கூடாது என்றும் உத்தரவிட்டது.[21][22][23]
2019-ஆம் ஆண்டில், சரவாக்கில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் (Solar Hybrid Power) வழங்கும் திட்டம் தொடர்பாக 18 பிப்ரவரி 2021 அன்று ரோஸ்மா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.[24] சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தில், தன்னை ஒப்பந்தம் செய்ய, அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த மாட்சிர் காலிட் (Mahdzir Khalid) மீது அழுத்தம் கொடுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 செப்டம்பர் 2022 அன்று, மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் ரோஸ்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மலேசிய ரிங்கிட் MYR970 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.[25][26][27]
ரோஸ்மாவின் கணவர் நஜீப் ரசாக், தன் 12 ஆண்டு சிறைத்தண்டனையைக் காஜாங் சிறையில் அனுபவிக்கத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே ரோஸ்மாவுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.[28]
ரோஸ்மா ஒரு ஆடம்பரப் பிரியர் என்றும் அறியப்படுகிறது. 2012-ஆம் ஆண்டில், சிட்னி அதிவிலை விற்பனை மையத்தில், ஒரே ஒரு ஒப்பனைப் பொருள் வாங்குவதற்கு ஆஸ்திரேலிய டாலர் $100,000 (மலேசிய ரிங்கிட் MYR325,000) செலவழித்ததாகவும் அறியப்படுகிறது. "கடைவல முதல் பெண்மணி" என்றும் பெயரிடப்பட்டார்.[29]
இவரின் இந்த ஆடம்பரமான வாழ்க்கை குறித்து மலேசிய ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. அதைப் பற்றி விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அழைக்கப்பட்டது.[30] 2014 இல், ரோஸ்மா, ஹவாய், ஹொனோலுலுவில் உள்ள ஒரு கடையில் அமெரிக்க டாலர் US$130,625 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார்.[31][32] ரோஸ்மாவும் நஜிப்பும் 1எம்டிபி பணத்தில், ஒரே நாளில், அமெரிக்க டாலர் US$15 மில்லியன் பணத்தை ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[31]