லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ( LSG ) என்பது உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும் . இது இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 2022 பருவத்தில் இருந்து விளையாடவுள்ளது. 2021இல் நிறுவப்பட்ட இந்த அணி, லக்னோவில் உள்ள BRSABV எகானா துடுப்பாட்ட அரங்கை தனது உள்ளக அரங்ககாக் கொண்டுள்ளது. இது 2016 மற்றும் 2017க்கு இடையில் செயல்பட்ட ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் உரிமையாளராக இருந்த RPSG குழுமத்திற்கு சொந்தமானதாகும். இந்த அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராகவும் செயல்படுகின்றனர்.[1]