லக்மே அழகுசாதன பொருட்கள்

லக்மே
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1952; 72 ஆண்டுகளுக்கு முன்னர் (1952)
நிறுவனர்(கள்)ஜெ. ர. தா. டாட்டா சிமோன் டாட்டா
தலைமையகம், இந்தியா
சேவை வழங்கும் பகுதி
தொழில்துறைதனிப்பட்ட பராமரிப்பு மற்றும் அழகு நிலையம்
உற்பத்திகள்ஒப்பனைப் பொருட்கள், அழகுப் பொருட்கள் தயாரிப்புகள் மற்றும் அழகு நிலையச் சேவைகள்
இணையத்தளம்lakmeindia.com

லக்மே (akmé ) என்பது ஒரு இந்திய அழகுசாதனபொருளாகும். இது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு சொந்தமானது. கரீனா கபூர் மற்றும் அனன்யா பாண்டே இதன் விளம்பரத் தூதராக இருந்ததால், இந்தியாவில் அழகுசாதனப் பொருட்களில் இது முதலிடத்தைப் பிடித்தது. [1] [2]

டாட்டா எண்ணெய் ஆலைகளின் (டாம்கோ) 100% துணை நிறுவனமாக லக்மே தொடங்கியது. இது பிரஞ்சு ஆப்பெராவான லக்மாவின் பெயரிடப்பட்டது. இது இந்துக்கடவுள் லட்சுமியின் (செல்வத்தின் தெய்வம்) பிரெஞ்சு வடிவமாகும். அவர் அழகுக்காக புகழ்பெற்றவர். லக்மே 1952 ஆம் ஆண்டில் பிரபலமாகத் தொடங்கப்பட்டது. அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு இந்திய பெண்கள் அழகு சாதனப் பொருட்களுக்காக விலைமதிப்பற்ற அந்நிய செலாவணியை செலவழிப்பதாக கவலை கொண்டிருந்ததோடு, அவற்றை இந்தியாவில் தயாரிக்க தனிப்பட்ட முறையில் ஜே.ஆர்.டி டாட்டாவை கேட்டுக்கொண்டார். சிமோன் டாடா நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்து தலைவராக ஆனார். 1996 ஆம் ஆண்டில், டாட்டா லக்மே லீவரில் உள்ள பங்குகளை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு ரூ .200 கோடிக்கு விற்றது (45 மில்லியன் அமெரிக்க டாலர்).

2012 இல் பொருட்களுக்கான நம்பிக்கை என்ற அறிக்கையில், இது இந்தியாவின் மிகவும் நம்பகமான பொருட்களில் 104 வது இடத்தைப் பிடித்தது. அடுத்த ஆண்டு இது பட்டியலில் 71 வது இடத்தைப் பிடித்தது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் 36 வது இடத்தைப் பிடித்தது. [3] இந்நிறுவனம், மும்பையில் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் நிகழ்வான லக்மே பேஷன் வீக் என்பதின் தலைமை விளம்பதாரர் .

குறிப்புகள்

[தொகு]
  1. "Top Cosmetic Brands in India". top10companiesinindia.co.in. Archived from the original on 21 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  2. "Top 10 Cosmetic Brands in India". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  3. "India's Most Trusted Brands 2014". Trust Research Advisory. Archived from the original on 2015-05-02.