லங்காவி (P004) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Langkawi (P004) Federal Constituency in Kedah | |
![]() லங்காவி மக்களவைத் தொகுதி (P004 Langkawi) | |
மாவட்டம் | லங்காவி![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 67,850 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | லங்காவி தொகுதி |
முக்கிய நகரங்கள் | லங்காவி, குவா நகரம், ஆயர் அங்காட் |
பரப்பளவு | 469 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமது சுகைமி அப்துல்லா (Mohd Suhaimi Abdullah) |
மக்கள் தொகை | 94,138 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
லங்காவி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Langkawi; ஆங்கிலம்: Langkawi Federal Constituency; சீனம்: 浮罗交怡国会议席) என்பது மலேசியா, கெடா, லங்காவி தீவில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P004) ஆகும்.[6]
லங்காவி மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து லங்காவி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
லங்காவி மாவட்டம் என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.
இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவி தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah; மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.[8]
இந்தத் தீவுக் குழும மாவட்டம், வடமேற்கு மலேசியாவின் கடற்கரையில், தாய்லாந்து எல்லையை ஒட்டி உள்ள கோ தருடா (Ko Tarutao) எனும் தீவிற்கு சில கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.
லங்காவி தீவு கெடாவின் நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். குவா அதன் பெரிய நகரமாக உள்ளது. லங்காவிக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பந்தாய் செனாங் (Pantai Cenang) தீவு, மிகவும் பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாப் பகுதியாகும்.[9]
லங்காவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | |||
---|---|---|---|
மக்களவை | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் லங்காவி தொகுதி உருவாக்கப்பட்டது | |||
9-ஆவது மக்களவை | 1995–1999 | அபுபக்கர் தாயிப் (Abu Bakar Taib) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | ||
11-ஆவது மக்களவை | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நவாவி அகமத் (Nawawi Ahmad) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) |
2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | ||
சுயேச்சை | |||
2020–2022 | தாயக இயக்கம் | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமது சுகைமி அப்துல்லா (Mohd Suhaimi Abdullah) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் | 66,777 | 100.00% |
வாக்களித்தவர்கள் | 48,123 | 71.10% |
செல்லுபடி வாக்குகள் | 47,480 | - |
செல்லாத வாக்குகள் | 643 | - |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
முகமது சுகைமி அப்துல்லா (Mohd Suhaimi Abdullah) |
பெரிக்காத்தான் | 25,463 | 53.63% | |
அர்மிசா சிராட் (Armishah Siradj) |
பாரிசான் | 11,945 | 25.16% | |
சாபிதி யாகயா (Zabidi Yahya) |
பாக்காத்தான் | 5,417 | 11.41% | |
மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 4,566 | 9.62% | |
அப்துல் காதிர் சைனுதீன் (Abd Kadir Sainudin) |
சுயேட்சை | 89 | 0.19% |