தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 26 அக்டோபர் 1996 கொழும்பு, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 149) | 13 பெப்ரவரி 2019 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 22 சனவரி 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 25 சனவரி 2021 |
லசித் எம்பல்தெனியா (Lasith Embuldeniya (பிறப்பு: 26 அக்டோபர் 1996) என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் சர்வதேச தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2017 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 25 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 262 ஓட்டங்களையும் , 10 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 31 ஓட்டங்களையும் , 4 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 38 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். இவர் ராயல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.[1]
28 ஜனவரி 2017 அன்று நடந்த 2016–17 பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் நோண்டெஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட சங்கம் சார்பாக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். [2] 17 மார்ச் 2017 அன்று நடைபெற்ற 2016–17 ஆம் ஆண்டுகளில் மாவட்ட ஒருநாள் போட்டியில் மாதாரா மாவட்ட துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். [3]
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் ஃபோர் மாகாணத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கொழும்பு துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.[4] அதற்கு அடுத்த மாதம் நடைபெற்ற 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு துடுப்பாட்ட அணியிலும் அவர் இடம் பெற்றார்.[5] ஆகஸ்ட் 2018 இல், அவர் கொழும்பு துடுப்பாட்ட அணியில் 2018 எஸ்.எல்.சி டி 20 லீக்கில் இடம் பெற்றார் .[6]
2017 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். மார்ச் 17 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் ஹம்பன்தோதா மாவட்ட துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மதரா துடுப்பாட்ட சங்க அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2018 ஆம் ஆண்டில் டிசம்பர் 15,இல் கொழும்பில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் இந்தியா லெவன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார்.
2015 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஏப்ரல் 4 இல் பங்கோதா துடுப்பாட்ட அரங்கத்தில் புளூம்ஃபீல்டு துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் கால்ட்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் 9 இல் லாகூர் துடுப்பாட்ட அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் இலங்கை துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.
டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசியா அணிகள் துடுப்பாட்டத் தொடரிக்கான இலங்கை அணியில் இவர் இடம் பெற்றார். [7] பிப்ரவரி 2019 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் அவர் இடம் பெற்றார். [8] அவர் பிப்ரவரி 13, 2019 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [9] தனது முதல் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம அறிமுகப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய நான்காவது இலங்கை வீரர் மற்றும் முதல் சர்வதேச இடதுகை பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்தார்.முடிவில் 66 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பறினார்.[10] [11]2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 22 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இலங்கை துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)