லஞ்சாங் | |
---|---|
Lanchang | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°9′N 110°29′E / 3.150°N 110.483°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 28xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +609 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | C |
லஞ்சாங் (மலாய்: Lanchang; ஆங்கிலம்: Lanchang); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், தெமர்லோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். காராக், மெந்தகாப் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை வழியாக இந்த நகரத்திற்குச் செல்லலாம்.
கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம் (Kuala Gandah Elephant Conservation Centre) இந்த லஞ்சாங் நகர்ப் பகுதியில் தான் அமைந்துள்ளது. இந்தக் கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம்தான் இந்தச் சிறிய நகரத்தின் முக்கிய ஈர்ப்பு இடமாக உள்ளது. இந்த யானைகள் பாதுகாப்பு மையம் 1974-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1] [2]
'லஞ்சாங் நகர்ப்பகுதி விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. முன்பு காலத்தில், இங்கு பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. பல தமிழ்ப்பள்ளிகலும் உருவாகின. விவசாய நடவடிக்கைகளினால் இன்று லஞ்சாங் நன்கு செழித்து வருகிறது. இந்த நகர்ப்பகுதி குறைந்த மக்கள் தொகையைக் கொண்டது. அத்துடன் விவசாயம் செய்வற்கு அதிக நிலம் உள்ளது. விவசாயம் சாஅர்ந்த தொழில்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.
பகாங் மாநிலத்தின் தெமர்லோ மாவட்டத்தில் (Temerloh District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 56 மாணவர்கள் பயில்கிறார்கள். 16 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
CBD7096 | லஞ்சாங் தோட்டம் Ladang Lanchang |
SJK(T) Ldg Lanchang | லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[4][5] | 28500 | லஞ்சாங் | 21 | 8 |
CBD7097 | Ladang Sungai Kawang | SJK(T) Ladang Sungai Kawang | சுங்கை கவாங் தமிழ்ப்பள்ளி (லஞ்சாங்)[6] | 28500 | லஞ்சாங் | 35 | 8 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)