லட்சுமி மால் சிங்வி (9 நவம்பர் 1931 - 6 அக்டோபர் 2007) இவர் ஒரு இந்திய நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அறிஞராகவும், எழுத்தாளராகவும் மற்றும் இராஜதந்திராகவும் இருந்தார். ஐக்கிய இராச்சியத்தில் (1991-97) இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கால உயர் ஸ்தானிகராக இருந்த வி. கே. கிருஷ்ண மேனனுக்குப் பிறகு இவர் அப்பதவியில் இருந்தார்.[1] இவருக்கு 1998 இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2]
சிங்வி இந்தியாவின் ராஜஸ்தானின் சோத்பூரில் மார்வாட் சமண குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பிரசன் மால் சிங்வி மற்றும் குலாப் மால் சிங்வி என்ற இரண்டு சகோதரர்களும், புஷ்பா சேத் மற்றும் சந்திர பண்டாரி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.[3] சிங்வி அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தங்கப்பதக்கம் வென்றவர். பின்னர் ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் தனது சட்டப் படிபிற்காக ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் உதவித்தொகைப் பெற்ற ராஜஸ்தானின் முதல் அறிஞர் ஆவார். பின்னர் இவர் தனது சட்ட மேற்படிப்பை அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[4]
சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, சோத்பூர் விசாரணை மற்றும் அமர்வு நீதிமன்றங்களில் சிங்வி தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1962 இல் சோத்பூரில் (மக்களவைத் தொகுதி) இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு முன்பு இவர் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஐந்தாண்டு காலப்பகுதியில், நீதிமன்றத்திற்கு இவர் வருகை புரிவது நாடாளுமன்றத்திலும் அவரது தொகுதியிலும் பணிபுரியும் கோரிக்கைகளால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் இவர் தனது சட்ட பயிற்சிக்கு முழுநேரமும் திரும்பினார். ஆனால் மீண்டும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திலும் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் பயிற்சி மேற்கொள்வதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் தனது பயிற்சியை கைவிட்டார். இவர் வழக்கறிஞர் தலைவர் என்று பெயர் பெற்றார். பின்னர் இவர் இந்திய உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
1950 களின் தசாப்தத்தில், ஜவகஹர்லால் நேரு அரசாங்கம் "சமூக நவீனமயமாக்கல்" என்ற திட்டத்தை தீவிரமாக முன்வைத்தது. இது இந்தியாவின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை பின்தங்கிய மற்றும் வெறுக்கத்தக்கது என்று தள்ளுபடி செய்வதற்கும், "நவீன மதிப்புகள்," "முற்போக்கான கண்ணோட்டம்" மற்றும் "விஞ்ஞான மனநிலை" என்பது மேற்கத்திய முன்னோக்குகள் மற்றும் திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் மனித உறவுகள் ஆகியவற்றின் அமைப்புகளை இந்திய நீதிமன்றங்கள் ஆதரிக்கும் சட்டமாகக் குறிப்பிட்டது. என்ன நடக்கிறது என்பதை உணர்ந்த சமூகத்தின் படித்த பிரிவினரிடையே இந்த தீவிர முயற்சிகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. எவ்வாறாயினும், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாதது இந்த திட்டதிற்குக்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பிற்கு ஒரு தடையாக இருந்தது. பிரித்தனில் இருந்து இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற்றதன் நற்பெயரும் கவர்ச்சியும் காங்கிரசு கட்சிக்கு இருந்தது. தேர்தல் களத்தில் இரண்டாவது அரசியல் கட்சியும் இல்லை.
ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்த தீவிரமான சமூகத் திட்டத்தின் எதிர்ப்பாளராக சிங்வி அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார். தீவிரமான சட்டங்கள் பெரும்பாலானவை இரண்டாவது மக்களவையின் (1957-62) காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டன. 1962 இல் மூன்றாவது மக்களவைக்கு தேர்தல்கள் நடைபெற்றபோது, சிங்வி தனது சொந்த ஊரான சோத்பூரிலிருந்து ஒரு சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் நின்றார். சோத்பூரில் அவரது குடும்பத்தினர் கொண்டிருந்த நல்ல பெயரின் அடிப்படையிலும், மேலும் இவரது சட்ட நடைமுறையின் மூலம் உருவாக்கப்பட்ட நல்லெண்ணம் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில், இவர் தேர்தலில் ஒரு சிறு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சோத்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக, புலனாய்வு அதிகாரங்களுடன் ஒரு சுயேட்சயாக, சட்டரீதியான விழிப்புணர்வு அமைப்பை உருவாக்க இவர் முன்மொழிந்தார், அரசாங்கத்தில் ஊழலைக் கண்டுபிடித்தார். எசுகாண்டிநேவிய நாடுகளில் குறைகேள் அதிகாரியின் பங்கு குறித்த இவரது ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. சிங்வி மக்களவை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால் 1967 தேர்தலில் தோல்வியடைந்தார். முப்பத்தொன்று ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்கு திரும்பவில்லை.
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)