Lakshmi Holmström லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் | |
---|---|
பிறப்பு | 1 சூன் 1935 சேலம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 6 மே 2016 நார்விச், இங்கிலாந்து, ஐக்கிய அரசாட்சி | (அகவை 80)
தொழில் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
கல்வி நிலையம் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் |
காலம் | 1973–2016 |
வகை | தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு |
கருப்பொருள் | மகளிர், செவ்வியல் மற்றும் தற்கால இலக்கியம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சங்கதி (மொழிபெயர்ப்பு) கருக்கு (மொழிபெயர்ப்பு) In a Forest, A Deer |
லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (Lakshmi Holmström 1935 - மே 6, 2016)[1] பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர். நவீனத் தமிழ்ப் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வந்தவர். மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தவர். சுந்தர ராமசாமியின் "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்" என்ற புதினத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார்.
இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வதற்குப் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றி வந்தவர். தமிழ்க் கவிதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் லண்டனிலும் பிற இடங்களிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் வாசித்துக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காவியங்களையும் வசன நடையில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றியும் பல கட்டுரைகளை ஆங்கில இதழ்களில் எழுதியுள்ளார்.