லதா (நடிகை)

லதா
பிறப்புநளினி
(1953-06-07)சூன் 7, 1953
தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சேதுபதி

லதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லதா 7, ஜூன் 1953இல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர்.[1] இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார்[2][3]

திரை வாழ்க்கை

[தொகு]

இவரது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி காரணமாகத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நாயகியாக நடித்தார். அதனால் எம்.ஜி.ஆர் லதா என்று அறியப்படும் அளவிற்குப் புகழ்பெற்றார். எம்.ஜி.ஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.

கவனிக்கத்தக்க படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1973 உலகம் சுற்றும் வாலிபன் தமிழ் லில்லி
1974 நேற்று இன்று நாளை தமிழ்
1974 சிரித்து வாழ வேண்டும் தமிழ்
1974 உரிமைக்குரல் தமிழ்
1974 சிவகாமியின் செல்வன் தமிழ்
1975 பல்லாண்டு வாழ்க தமிழ் சரோஜா
1975 நாளை நமதே தமிழ் ராணி
1975 நினைத்ததை முடிப்பவன் தமிழ் மோகனா
1976 உழைக்கும் கரங்கள் தமிழ் முத்தம்மா
1976 மகாடு தெலுங்கு
1977 நீதிக்கு தலைவணங்கு தமிழ்
1977 மீனவ நண்பன் தமிழ்
1977 நவரத்தினம் தமிழ்
1977 குருசேத்திரம் தெலுங்கு ச‌‌த்‌தியபாமா‌
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழ்
1978 சங்கர் சலீம் சைமன் தமிழ்
1978 ஆயிரம் ஜென்மங்கள் தமிழ் சாவித்திரி
1979 நீயா தமிழ்

சொந்த வாழ்க்கை

[தொகு]

லதா சேதுபதி என்ற சிங்கப்பூர் தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.[2][4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]