லதா மங்கேஷ்கர் விருது (Lata Mangeshkar Award) என்பது இசைத் துறையில் படைப்புகளைக் கவுரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு தேசிய அளவிலான விருதாகும். இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் லதா மங்கேஷ்கர் பெயரில் விருதுகளை வழங்குகின்றன. மத்தியப் பிரதேச மாநில அரசு இந்த விருதை 1984ஆம் ஆண்டில் தொடங்கியது.[1] இந்த விருது தகுதிச் சான்றிதழும் ரொக்கப் பரிசினையும் கொண்டுள்ளது. 1992 முதல் மகாராட்டிர அரசால் வழங்கப்படும் லதா மங்கேஷ்கர் விருதும் உள்ளது. இது அதிகாரப்பூர்வமாக "வாழ்நாள் சாதனைக்கான லதா மங்கேஷ்கர் விருது" என்றும் அழைக்கப்படுகிறது. மற்றொரு விருது ஆந்திரப் பிரதேச அரசால் வழங்கப்படுகிறது.
லதா மங்கேஷ்கர் விருது பெற்றவர்கள் பின்வருமாறு:
மங்கேஷ்கர் குடும்பமும் தீனநாத் மங்கேஷ்கர் சுமிருதி பிரதிசுடான் தொண்டு அறக்கட்டளையும் 2022ஆம் ஆண்டு முதல், பல உறுப்பு செயலிழப்பைத் தொடர்ந்து பிப்ரவரி 2022இல் காலமான லதா மங்கேஷ்கரின் நினைவாக இந்த விருதை நிறுவ முடிவு செய்தன. அப்போது லதா மங்கேஷ்கருக்கு வயது 92.
ஆண்டு | பெறுநர் | குறிப்புகள் |
---|---|---|
2022 | நரேந்திர மோதி[2] | இந்திய பிரதமர் |
2023 | ஆஷா போஸ்லே[3] | 2வது மங்கேஷ்கர் உடன்பிறப்பு |
2024 | அமிதாப் பச்சன்[4] | நடிகர் |
ஆண்டு | பெறுநர் | குறிப்புகள் |
---|---|---|
1984 | நௌசாத் | இசையமைப்பாளர் |
1985 | கிஷோர் குமார் | பாடகர் |
1986 | ஜெயதேவ் | இசையமைப்பாளர் |
1987 | மன்னா தே | பாடகர் |
1988 | கயாம் | இசையமைப்பாளர் |
1989 | ஆஷா போஸ்லே | பாடகர் |
1990 | இலட்சுமிகாந்த்-பியாரேலால் | இசையமைப்பாளர்கள் |
1991 | கே. ஜே. யேசுதாஸ் | பாடகர் |
1992 | ராகுல் தேவ் பர்மன் | இசையமைப்பாளர் |
1993 | சந்தியா முகர்ஜி | பாடகர் |
1994 | அனில் பிஸ்வாஸ் | இசையமைப்பாளர் |
1995 | தலத் மஹ்மூத் | பாடகர் |
1996 | கல்யாண்ஜி-ஆனந்த்ஜி | இசையமைப்பாளர்கள் |
1997 | ஜக்ஜீத் சிங் | பாடகர் |
1998 | இளையராஜா | இசையமைப்பாளர் |
1999 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பாடகர் |
2000 | பூபேன் அசாரிகா | இசையமைப்பாளர் |
2001 | மகேந்திர கபூர்[5] | பாடகர் |
2002 | ரவீந்திர ஜெயின் | இசையமைப்பாளர் |
2003 | சுரேஷ் வாட்கர்[1] | பாடகர் |
2004 | ஏ. ஆர். ரகுமான் | இசையமைப்பாளர் |
2005 | கவிதா கிருஷ்ணமூர்த்தி | பாடகர் |
2006 | இருதயநாத் மங்கேசுகர் | இசையமைப்பாளர் |
2007 | ஓ. பி. நய்யார் | இசையமைப்பாளர் |
2008 | ரவி[6] | இசையமைப்பாளர் |
2009 | அனுராதா பாட்வால்[6] | பாடகர் |
2010 | ராஜேஷ் ரோஷன்[7] | இசையமைப்பாளர் |
2011 | அரிகரன்[8] | பாடகர் |
2012 | உஷா கண்ணா | இசையமைப்பாளர் |
2013 | ஆல்கா யாக்னிக் | பாடகர் |
2014 | பப்பி லஹரி | இசையமைப்பாளர் |
2015 | உதித் நாராயண் | பாடகர் |
2016 | அனு மாலிக் | இசையமைப்பாளர் |
2017 | சுமன் கல்யாண்பூர் | பாடகர் |
2018 | குல்தீப் சிங்[9] | இசையமைப்பாளர் |
2019 | ஷைலேந்திர சிங் | பாடகர் |
2020 | ஆனந்த்-மிலிந்த் | இசையமைப்பாளர்கள் |
2021 | குமார் சானு | பாடகர் |
2022 | உத்தம் சிங் | இசையமைப்பாளர் |
2023 | கே. எஸ். சித்ரா | பாடகர் |
மகாராட்டிர அரசால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான லதா மங்கேஷ்கர் விருது, ₹ 5,00,000 ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம், கேடயம், சால்வை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[10]
ஆண்டு | பெறுநர் | குறிப்புகள் |
---|---|---|
1992 | மாணிக் வர்மா | பாடகர் |
1993 | ஸ்ரீனிவாஸ் காலே | இசையமைப்பாளர் |
1994 | கஜானன் வாத்வே | இசையமைப்பாளர் |
1995 | தத்தா தாவ்ஜேகர் | இசையமைப்பாளர் |
1996 | சிதேந்திர அபிசேகி | பாடகர் |
1997 | இருதயநாத் மங்கேசுகர் | இசையமைப்பாளர் |
1998 | அனில் பிசுவாசு | இசையமைப்பாளர் |
1999 | ஆஷா போஸ்லே | பாடகர் |
2001 | சுதிர் பத்கே | இசையமைப்பாளர் |
2002 | ப்யாரெலால்[11] | இசையமைப்பாளர் |
2004 | ஸ்னேஹால் பட்கர்[12] | இசையமைப்பாளர் |
2005 | மன்னா தே[12] | பாடகர் |
2006 | ஜெயமாலா ஷீல்தார்[12] | பாடகர் |
2009 | சுமன் கல்யாண்பூர்[13] | பாடகர் |
2010 | சுலோச்சனா சவான்[14] | பாடகர் |
2011 | யஷ்வந்த் தேவ்[15] | இசையமைப்பாளர் |
2012 | ஆனந்த்ஜி[16] | இசையமைப்பாளர் |
2014 | கிருஷ்ணா காலே[10] | பாடகர் |
2017 | புஷ்ப பக்தரே[17] | பாடகர் |
2018 | ராம்லட்சுமன்[18] | இசையமைப்பாளர் |
2019 | உஷா கண்ணா[19] | இசையமைப்பாளர் |
2020 | உஷா மங்கேஷ்கர்[20] | பாடகர் |
2023 | சுரேஷ் வாட்கர்[21] | பாடகர் |
2024 | அனுராதா பாட்வால்[22] | பாடகர் |
ஆண்டு | பெறுநர் | குறிப்புகள் |
---|---|---|
2011 | சங்கர் மகாதேவன்[23] | இசையமைப்பாளர் |
2011 | கே. எஸ். சித்ரா[24] | பாடகர் |
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)