வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவம் | ||||||||||
உரிமையாளர் | கசானா நேசனல் Khazanah Nasional | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | லபுவான், மலேசியா | ||||||||||
அமைவிடம் | லபுவான், மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 101 ft / 31 m | ||||||||||
ஆள்கூறுகள் | 05°18′06″N 115°14′54″E / 5.30167°N 115.24833°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||
| |||||||||||
லபுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LBU, ஐசிஏஓ: WBKL); (ஆங்கிலம்: Labuan International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Labuan) என்பது மலேசியா, லபுவான் கூட்டரசு பிரதேசத்தில் விக்டோரியா மாநகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
இந்த வானூர்தி நிலையம், லபுவான் கூட்டரசு பிரதேசத்தின் தலைநகரமான விக்டோரியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சரவாக் தலைநகர் கூச்சிங்கிற்கு வடகிழக்கே 610 கி.மீ. (380 மைல்); சிபுவிற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரிக்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் உள்ளது.
லபுவான் விமான நிலையம், தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) நாடுகளுக்குள் விமானங்களை இணைக்கும் ஒரு பிராந்திய மையமாக அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் சில பொருத்தமற்றத் தன்மைகள் காரணமாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விமான நிலையத்தில் 4 வான்பாலங்கள் (Aerobridges) உள்ளன. அத்துடன் போயிங் 747 (Boeing 747) மற்றும் ஏர்பஸ் ஏ330 (Airbus A330) போன்ற பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
2020-இல், இந்த விமான நிலையத்தை 270,959 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். 3,354 விமான இயக்கங்கள் நடைபெற்று உள்ளன. மற்றும் 5,999 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 1.2 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடிய திறன் பெற்று உள்ளது.
15-ஆம் நூற்றாண்டு தொடங்கி 18-ஆம் நூற்றாண்டு வரை, லபுவான் உட்பட போர்னியோவின் வடக்கு, மேற்குக் கரைகள் புருணை சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.[3]
18-ஆம் நூற்றாண்டில், லபுவான் நிலப்பகுதி பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1846 டிசம்பர் 18-ஆம் தேதி, புருணை சுல்தான் ஒமார் அலி சபியுதீன் (Omar Ali Saifuddin II) என்பவருடன் செய்து கொண்ட உடன்பாட்டின் கீழ், இந்தத் தீவை பிரித்தானியாவுக்காக ஜேம்சு புரூக் (James Brooke) என்பவர் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் 1965-ஆம் ஆண்டில் லபுவான் பிரதேசம், மலேசியாவின் ஒரு பகுதியானது. அதுவரை லபுவான் பிரதேசத்தின் ஆட்சி அதிகாரம் பிரித்தனியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
நிறுவனம் | சேரிடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் மிரி வானூர்தி நிலையம் |
மலேசியா எயர்லைன்சு (Malaysia Airlines) |
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
ஏர்ஏசியா (AirAsia) |
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
பாத்தேக் ஏர் மலேசியா (Batik Air Malaysia) முன்பு (Malindo Air) |
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்[4] |
நிறுவனம் | சேரிடங்கள் |
---|---|
மாஸ் கார்கோ (MASkargo) |
ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
ராயா ஏர்வேய்ஸ் (Raya Airways) |
சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் |
ஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2011 | 567,928 | 5,294 | 12,762 | |||
2012 | 617,130 | 8.7 | 6,072 | 14.7 | 13,589 | 6.5 |
2013 | 738,769 | 19.7 | 9,329 | 53.6 | 15,139 | 11.4 |
2014 | 789,494 | 6.9 | 11,591 | 24.2 | 15,596 | 3.0 |
2015 | 684,108 | ▼ 13.3 | 9,834 | ▼ 15.2 | 13,249 | ▼ 15.0 |
2016 | 269,696 | ▼ 13.0 | 4,620 | ▼ 53.0 | 10,959 | ▼ 17.3 |
2017 | 595,290 | 3.0 | 5,071 | 9.8 | 10,185 | ▼ 7.1 |
2018 | 574,107 | ▼ 0.6 | 3,996 | ▼ 21.1 | 10,698 | 5.0 |
2019 | 710,271 | 23.7 | 6,270 | 56.9 | 12,143 | 13.5 |
2020 | 270,959 | ▼ 61.9 | 3,354 | ▼ 46.5 | 5,999 | ▼ 50.6 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[5] |
தர வரிசை |
இலக்குகள் | பயணங்கள் (வாரம்) |
---|---|---|
1 | மிரி வானூர்தி நிலையம் | 35 |
2 | கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் | 35 |
3 | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | 14 |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)