லபுவான் (P166) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Labuan (P166) Federal Territories of Malaysia | |
![]() லபுவான் மக்களவைத் தொகுதி (P166 Labuan) | |
மாவட்டம் | லபுவான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 44,484 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | லபுவான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | லபுவான்; விக்டோரியா, லபுவான் |
பரப்பளவு | 96 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சுகைலி அப்துல் ரகுமான் (Suhaili Abdul Rahman) |
மக்கள் தொகை | 95,120 (2020) [4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லபுவான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Labuan; ஆங்கிலம்: Labuan Federal Constituency; சீனம்: 纳闽国会议席) என்பது மலேசியா, போர்னியோ, மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள், லபுவான் தீவில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P166) ஆகும்.[6]
லபுவான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து லபுவான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
லபுவான் என்பது மலேசியாவின் ஒரு கூட்டாட்சிப் (Federal Territory of Labuan) பகுதி ஆகும். இது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் அமைந்துள்ள லபுவான் தீவையும் ஆறு சிறிய தீவுகளையும் கொண்டது. இதன் தலைநகரம் விக்டோரியா ஆகும்.
1990 முதல் விக்டோரியா நகரம் பன்னாட்டு நிதி மற்றும் வணிகச் சேவைகளை வழங்கும் கடல் வணிக மையமாகவும், ஆழ்கடல் எண்ணெய்; எரிவாயு நடவடிக்கைகளுக்கான மையமாகவும் அறியப்படுகிறது. அத்துடன் பிரபலமான சுற்றுலா மையமாகவும் விளங்குகின்றது.
லபுவான் எனும் பெயர் மலாய் மொழியில் துறைமுகத்தைக் குறிக்கும் "லபுகான்" என்னும் சொல்லில் இருந்து உருவானது. 15-ஆம் நூற்றாண்டு முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு லபுவான் உட்பட போர்னியோவின் வடக்கு, மேற்குக் கரைகள் புருணை சுல்தானகத்தின் பகுதிகளாக இருந்தன.[8] [9]
லபுவான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
லபுவான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
லபுவான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லபுவான் தொகுதி 1984-ஆம் ஆண்டில் ஈலீர் பாடாஸ் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P133 | 1986–1990 | அப்துல் மூலோக் அவாங் தாமிட் (Abdul Mulok Awang Damit) |
சுயேச்சை |
8-ஆவது மக்களவை | 1990–1995 | பாரிசான் நேசனல் (அம்னோ) | ||
9-ஆவது மக்களவை | P145 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | சுகைலி அப்துல் ரகுமான் (Suhaili Abdul Rahman) | ||
11-ஆவது மக்களவை | P166 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | யூசோப் மகால் (Yussof Mahal) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | ரோசுமான் இசுலி (Rozman Isli) | ||
14-ஆவது மக்களவை | ||||
2018–2022 | வாரிசான் | |||
15-ஆவது மக்களவை | 2022–2024 | சுகைலி அப்துல் ரகுமான் (Suhaili Abdul Rahman) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |
2024–தற்போது வரையில் | சுயேச்சை |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சுகைலி அப்துல் ரகுமான் (Suhaili Abdul Rahman) | பெரிக்காத்தான் நேசனல் (PN) | 8,124 | 28.56 | 28.56 ![]() | |
பசீர் அலியாஸ் (Bashir Alias) | பாரிசான் நேசனல் (BN) | 7,416 | 26.07 | 21.5 ▼ | |
ரோசுமான் அலி (Rozman Isli) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 7,310 | 25.70 | 15.10 ▼ | |
ரம்லி தகீர் (Ramli Tahir) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 5,307 | 18.65 | 18.65 ![]() | |
டாயாங் ருசிமா (Dayang Rusimah) | மலேசிய தேசிய கட்சி (PBM} | 202 | 0.71 | 0.71 ![]() | |
ரம்லி மாட் டாலி (Ramle Mat Daly) | தாயக இயக்கம் (GTA) | 90 | 0.32 | 0.32 ![]() | |
மொத்தம் | 28,449 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 28,449 | 98.91 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 313 | 1.09 | |||
மொத்த வாக்குகள் | 28,762 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,484 | 63.95 | 12.68 ▼ | ||
Majority | 708 | 2.49 | 4.30 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)