லலிதா சகஸ்ரநாமம்

லலிதா திரிபுர சுந்தரி

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் (Lalitha Sahasranamam), இது பிரம்மாண்ட புராணத்திலிருந்து வந்த ஒரு நூல் தொகுப்பாகும்.[1] லலிதா சஹஸ்ரநாமம் என்பது இந்து கடவுள் லலிதா தேவியின் (லலிதா திரிபுரசுந்தரி) ஆயிரம் பெயர்களை குறிக்கும்.

அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர்.[2][3] இந்த ஆயிரம் திருநாமங்கள் உபதேசித்த இடம் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.

லலிதா தேவி சக்தி தாயின் வெளிப்பாடாக கருத்தப்படுகிறாள். லலிதா தேவியின் வழிபாட்டாளர்களுக்கு இது ஒரு புனித நூலாகும், எனவே இது ஸ்ரீகுல சம்பிரதாய வழிபாட்டில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமம், லலிதா தேவியின் பல்வேறு பண்புகளை ஒரு பாடலில் ஒழுங்கமைக்கப்பட்ட பெயர்களின் வடிவத்தில் கூறுகிறது. இந்த லலிதா சஹஸ்ரநாமம் தெய்வீகத் தாயை வணங்குவதற்கு பரயானா (பாராயணம்), அர்ச்சனா, ஹோமா போன்ற பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்

[தொகு]

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஆயிரம் பெயர்களை குறிக்கும் துதிப்பாடல்கள் அல்லது ஸ்தோத்திரங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, எனவே சஹஸ்ரநாமத்தை ஸ்தோத்திர வடிவத்தில் அல்லது நமாவளி வடிவத்தில் உச்சரிக்கலாம்.

ஒரே பெயரை மீண்டும் சொல்லாத ஒரே ஒரு சஹஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமம் ஆகும்.[4] இது சரியாக 1000 பெயர்களைக் கொண்டுள்ளது.

லலிதா சஹஸ்ரநாமம் ஸ்ரீ ஹயக்ரீவரால் சித்தர்களில் தலையாய குறுமுனி  ஸ்ரீ அகத்தியருக்கு அருளப்பட்டது

ப்ரஹ்மாண்ட புராணத்தில், லலிதோபாக்கியானத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை அருளினார்.

லலிதா தேவியின் கட்டளையின் பேரில், எட்டு தேவிகள் (வாசினி, காமேஸ்வரி, அருணா, விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஷ்வரி, மற்றும் கௌலினி) லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றியதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tagare, G.V. (1958). The Brahmanda Purana. Motilal Banarsidass Publishers Pvt. p. 1464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120838246.
  2. Tagare, G.V. (1958). Lalitopakhyana (chapters 41-44). Motilal Banarsidass Publishers Pvt. p. 1464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120838246.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "1000 Lalitha Sahasranamam Lyrics in Tamil - தமிழ் DNA". பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.