லலித் சென் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1962-1971 | |
முன்னையவர் | ஜோகிந்தர் சென் |
பின்னவர் | வீரபத்ர சிங் |
தொகுதி | மண்டி, இமாச்சலப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 21, 1932 சிம்லா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய இமாச்சலப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | அக்டோபர் 18, 1985 (வயது 53) தில்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கிர்ஷ்ண குமாரி |
மூலம்: [1] |
லலித் சென் (Lalit Sen)(21 ஏப்ரல் 1932 - 18 அக்டோபர் 1985) இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக மண்டி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவிலுள்ள பிஷப் காட்டன் பள்ளியின் மாணவரான இவர், தில்லியில் உள்ள தூய ஸ்டீபன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். [1] [2] [3]
லலித் சென், சுகேத் சமஸ்தானத்தின் 51வது பட்டத்து அரசர் ஆவார். இவரது தந்தை ராஜா லக்ஷ்மன் சென் பகதூர், சுகேத்தின் கடைசி அரசர். இவரது மரணத்திற்குப் பிறகு, பெயரளவில் அவரது மகன் ஹரி சென் மூலம் சுகேத்தின் அரியணையில் ஏறினார்.[4]