லா பாஸ் மணல் திட்டுகள் | |
---|---|
சூழலியல் | |
பல்லுயிர்த் தொகுதி | பாலைவனங்கள் மற்றும் புதர்கள் |
புவியியல் | |
நாடுகள் | பிலிப்பைன்ஸ் |
மாநிலங்கள் | இலோகொஸ் நோர்டே |
காலநிலை வகை | பாலைவன தட்ப வெப்பம் |
லா பாஸ் மணல் திட்டுகள் (La Paz Sand Dunes), பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகொஸ் பிராந்தியத்தில் அமைந்த இலோகொஸ் நோர்டே மாகாணத்தில் லோவோக் நகரத்தில் அமைந்த கடற்கரை ஓரத்தில் 85-சதுர-கிலோமீட்டர் (33 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மணல் திட்டுகளால் இப்பகுதி மணல் பாலைவனமாக காட்சியளிக்கிறது.
இந்த உயரமான மணல் திட்டுகளில் மணல் சறுக்கு விளையாட்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுதலை சுற்றுலாவாசிகள் பொழுதுபோக்கான கொண்டுள்ளனர்.[1]