தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | லாங்டன் ருசேரே |
பிறப்பு | 7 சூலை 1985 மாசுவிங்கோ, சிம்பாப்வே |
பங்கு | நடுவர் |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 5 (2021–2023) |
ஒநாப நடுவராக | 28 (2015–2023) |
இ20ப நடுவராக | 50 (2015–2023) |
பெஒநாப நடுவராக | 9 (2017–2022) |
பெஇ20 நடுவராக | 9 (2018–2020) |
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 சூன் 2023 |
லாங்டன் ருசேரே (பிறப்பு: ஜூலை 7, 1985) சிம்பாப்வேயைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவர் ஆவார்.[1][2] அவர் தனது முதல் டி20 சர்வதேச போட்டியில், 2015 ஜூலை 19 அன்று சிம்பாப்வேக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆட்டத்தில் நடுவராகப் பணியாற்றினார்.[3] அவர் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 2015 அக்டோபர் 24 அன்று சிம்பாப்வேக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஆட்டத்தில் நடுவராகப் பணியாற்றினார்.[4]
2018 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கோப்பைஇல் 17 கள நடுவர்களில் இவரும் ஒருவர்.[5] 2018 மார்ச் 17 அன்று துடுப்பாட்ட உலகக் கோப்பை தகுதிப் போட்டியில், பப்புவா நியூ கினி மற்றும் ஹாங்காங் அணிகளுக்கிடையிலான ஒன்பதாவது இடத்திற்கான போட்டியின் போது சரபுதுல்லாவுடன் கள நடுவர்களில் ஒருவராக இருந்தார்.[6] ஹராரேயில் உள்ள பழைய அராரியன்சில் நடந்த இந்தப் போட்டி 4,000ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியாகும்.[7]
ஏப்ரல் 2021 இல், சிம்பாப்வேக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில், தேர்வுப் போட்டியொன்றில் பணியாற்றிய முதல் கறுப்பின ஆப்பிரிக்க நடுவர் என்ற பெருமையை ருசேரே பெற்றார்.[8][9][10]
ஓமானிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடைபெற்ற 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக் கோப்பையில் பணியாற்றிய 16 நடுவர்களில் இவரும் ஒருவர். பிப்ரவரி 2022 இல், நியூசிலாந்தில் நடைபெற்ற 2022 மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான கள நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.[11][12]
அக்டோபர் 2022 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால், ஆத்திரேலியாவில் நடந்த 2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக் கோப்பையில் பணியாற்றும் 20 போட்டி அதிகாரிகளில் ஒருவராக இவர் உள்ளடக்கப்பட்டார்.[13]