லாங்மியுர்-டெய்லர் உணரி (Langmuir–Taylor detector) என்பது டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான உணரியாகும் [1]. மேற்பரப்பு அயனியாக்க உணரி அல்லது சூடான கம்பி உணரி என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. லாங்மியுர் மற்றும் கிங்தன் ஆகியோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் லாங்மியுர் இவ்வுணரியை உருவாக்கினார் [2].
இந்த கண்டுபிடிப்பு வழக்கமாக உயர் வேலை செயல்பாடு (பொதுவாக டங்ஸ்டன் அல்லது ரினியம்) ஒரு சூடான மெல்லிய இழை அல்லது ஒரு உலோக நாடா கொண்டுள்ளது. உயர் விடுப்பாற்றல் கொண்ட உலோகங்களின் (பொதுவாக தங்குதன் அல்லது இரேனியம்) ஒரு சூடான மெல்லிய இழை அல்லது ஒரு உலோக நாடா இவ்வுணரியில் உள்ளது. இழையின் மீது மோதும் நடுநிலை அயனிகள் அல்லது மூலக்கூறுகளால், மேற்பரப்பு அயனியாக்கச் செயல்முறையின் விளைவாக நேர்மின்சுமையுள்ள அயனிகளாக வெளியேற இயலும். எலக்ட்ரான் பெருக்கி, துகள் எண்ணல் மின்னணுவியல் நுட்பத்தை உபயோகித்து இம்மின்சுமையை தனித்தனியாக மின்சாரமாக அளவிடவோ அல்லது உணரவோ முடிகிறது.
பெரும்பாலும் குறைவான அயனியாக்கும் ஆற்றல் கொண்ட கார அணுக்களுடன் சேர்க்கப்பட்டு இவ்வுணரி பொருண்மை நிறமாலையியல் மற்றும் அணு கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.