லான்சுபோர்டைட்டு

லான்சுபோர்டைட்டு
Lansfordite
பொதுவானாவை
வகைகார்பனேட்டுகள்
வேதி வாய்பாடுMgCO3·5H2O
இனங்காணல்
மோலார் நிறை174.39
படிக இயல்புபடிகங்கள்,
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
பிளப்புசரி பிளவு, தனித்துவம்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுபளபளப்பு (புதியது)
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும், ஒளிபுகாது
ஒப்படர்த்தி1.6
அடர்த்தி1.6
இரட்டை ஒளிவிலகல்0.042

லான்சுபோர்டைட்டு (Lansfordite) என்பது MgCO3·5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1] நீரேறிய மக்னீசியம் கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. 1888 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவின் லான்சுபோர்டு மாகாணத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் முதன் முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் லான்சுபோர்டைட்டு கனிமத்தை Lfd[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

லான்சுபோர்டைட்டு பொதுவாக நிறமற்றும் அல்லது வெள்ளை நிறங்கொண்ட பட்டகமாகவும், விழுதுப்பாறைப் பொதியாகவும் தோன்றுகிறது. மென்மையான கனிமமான இதன் மோவின் கடினத்தன்மை 2.5 எனவும் ஒப்படர்த்தி 1.7 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கனிமத்தின் ஒளிவிலகல் குறியீட்டு எண் 1.46 முதல் 1.52 ஆக உள்ளது. P21/c[3] என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் லான்சுபோர்டைட்டு படிகமாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lansfordite Mineral Data". www.webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  3. Liu, B.N.; Zhou, X.T.; Cui, X.S.; Tang, J.G. (1990). "Synthesis of lansfordite MgCO3*5H2O and its crystal structure investigation". Science in China B33: 1350–1356.