லாபிஸ் (P142) மலேசிய மக்களவை தொகுதி ஜொகூர் | |
---|---|
Labis (P142) Federal Constituency in Johor | |
லாபிஸ் மக்களவைத் தொகுதி (P142 Labis) | |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 42,404 (2020)[1][2] |
வாக்காளர் தொகுதி | லாபிஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | லாபிசு; தெனாங்; சாஆ; பெக்கோக் |
பரப்பளவு | 1,374 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | பாங் கோக் லியோங் (Pang Hok Liong) |
மக்கள் தொகை | 49,846 (2022)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லாபிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Labis; ஆங்கிலம்: Labis Federal Constituency; சீனம்: 拉美士国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P142) ஆகும்.[6]
லாபிஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து லாபிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
லாபிஸ் நகரம் ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தீபகற்ப மலேசியாவின் பழைய வடக்கு-தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலை, லாபிஸ் நகரின் வழியாகச் செல்கிறது. சிங்கப்பூர்; ஜொகூர் பாரு மாநகரங்களுக்குப் பயணிப்பவர்கள் இந்த நகரைக் கடந்து செல்ல வேண்டும்.
மலேசியாவின் முதன்மைத் தொடருந்து சேவையான மலாயா தொடருந்து நிறுவனம், தெற்கில் இருக்கும் ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகருடன் இந்த நகரத்தை இணைக்கின்றது.
முன்பு காலத்தில், கம்போங் பாயா மேரா (Kampung Paya Merah) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமமாக லாபிஸ் இருந்தது. இங்கு அதிகமாகக் காணப்பட்ட நன்னீர் ஆமைகளில் இருந்து இந்த இடத்திற்கு லாபிஸ் என்று பெயர் வந்தது.
லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லாபிஸ் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P099 | 1974–1978 | மூசா ஈத்தாம் (Musa Hitam) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | பகாரி அருண் (Bahari Haron) | ||
7-ஆவது மக்களவை | P118 | 1986–1990¹ | லிங் லியோங் சிக் (Ling Liong Sik) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P128 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P142 | 2004–2008 | சுவா சோய் லெக் (Chua Soi Lek) | |
2008 | காலி[9] | |||
12-ஆவது மக்களவை | 2008–2013 | சுவா தி யோங் (Chua Tee Yong) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாங் கோக் லியோங் (Pang Hok Liong) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
பாங் கோக் லியோங் (Pang Hok Liong) | பாக்காத்தான் அரப்பான் | 16,133 | 46.43 | 5.74 ▼ | |
சுவா தி யோங் (Chua Tee Yong) | பாரிசான் நேசனல் | 13,300 | 38.28 | 3.25 ▼ | |
அல்வின் சாங் தெக் கியாம் (Alvin Chang Teck Kiam) | பெரிக்காத்தான் நேசனல் | 5,312 | 15.29 | 15.29 | |
மொத்தம் | 34,745 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 34,745 | 98.51 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 526 | 1.49 | |||
மொத்த வாக்குகள் | 35,271 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 49,846 | 69.70 | 1.06 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)