லாருட் (P056) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Larut (P056) Federal Constituency in Perak | |
மாவட்டம் | லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 65,719 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | லாருட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | துரோங், தைப்பிங், சங்காட் ஜெரிங், புக்கிட் கந்தாங், கோலா சபெத்தாங், மெக்சுவல் மலை |
பரப்பளவு | 1,129 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அம்சா சைனுடின் (Hamzah Zainuddin) |
மக்கள் தொகை | 66,020 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
லாருட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Larut; ஆங்கிலம்: Larut Federal Constituency; சீனம்: 拉律国会议席) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut, Matang and Selama District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P056) ஆகும்.[6]
லாருட் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து லாருட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தின் தலைப்பட்டணம் தைப்பிங். இந்த மாவட்டத்தில் தான் மலாயாவின் முதல் தொடருந்துச் சேவை தைப்பிங்கில் இருந்து கோலா செபாத்தாங் வரை தொடங்கப்பட்டது.
தற்சமயம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் இரு தனித்தனியான நகராண்மைக் கழகங்களினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. லாருட், மாத்தாங் பகுதிகளுக்கு தைப்பிங் நகராட்சி; செலாமா பகுதிக்கு செலாமா நகராட்சி எனும் இரு நகராட்சிகள் செயல் படுகின்றன.
மெக்ஸ்வல் மலை தற்போது புக்கிட் லாருட் என்று அழைக்கப்படுகிறது. 1979-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் அடைந்தது. இது தைப்பிங் நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 1884-ஆம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல்[7] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் நினைவாக அந்த இடத்திற்கும் அவருடைய பெயர் வைக்கப்பட்டது.[8][9]
மெக்ஸ்வல் மலை மலேசியாவிலேயே மிகவும் பழமையான உல்லாசப் பொழுது போக்கு மலைத் தளம் ஆகும். இது 1250 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. மலேசியாவில் இங்கு தான் அதிகமான மழை பெய்கிறது[10].
லாருட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் லாருட் உத்தாரா மக்களவைத் தொகுதியில் இருந்து லாருட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P045 | 1974–1978 | கமாருதின் முகமது இசா (Kamaruddin Mohamed Isa) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P050 | 1986–1990 | முகமது சிகின் முகமது அசன் (Mohd. Zihin Mohd. Hassan) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P053 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | ராஜா அகமட் சைனுடின் (Raja Ahmad Zainuddin Raja Omar) | ||
11-ஆவது மக்களவை | P056 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | அம்சா சைனுடின் (Hamzah Zainudin) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018–2019 | சுயேச்சை | |||
2019–2020 | பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
65,719 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
52,764 | 78.93% | ▼ - 2.91% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
51,875 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
154 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
735 | ||
பெரும்பான்மை (Majority) |
11,598 | 22.36% | + 11.04 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [11] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
அம்சா சைனுடின் (Hamzah Zainudin) |
பெரிக்காத்தான் | 51,875 | 28,350 | 54.65% | + 54.65% | |
முகமது சபிக் பட்லி மகமூத் (Mohd Shafiq Fhadly Mahmud) |
பாரிசான் | 16,752 | 32.29% | - 13.61 % ▼ | ||
சுல்கர்னைன் அபிதீன் (Zolkarnain Abidin) |
பாக்காத்தான் | - | 6,207 | 11.97% | - 7.56% ▼ | |
அபிசே பசுலான் சாகிடி (Awzey Fazlan Sahidi) |
பெஜுவாங் | - | 566 | 1.09% | + 1.09% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)