லார்க்கின் | |
---|---|
நகரம் | |
Larkin | |
ஆள்கூறுகள்: 1°29′24″N 103°42′20″E / 1.49000°N 103.70556°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.3 km2 (4.7 sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 80350 |
இடக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
லார்க்கின் (ஆங்கிலம்: Larkin; மலாய்: Larkin; சீனம்: 拉慶; ஜாவி: لركين) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
ஜொகூர் பாரு மாநகரில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடமாக லார்க்கின் நகர்ப்பகுதி கருதப் படுகிறது. லார்க்கின் நகர்ப் பகுதியின் சுற்று வட்டாரத்தில் நிறைய விற்பனை மையங்களும், பேரங்காடிகளும், கேளிக்கை மையங்களும் உள்ளன. தவிர இங்குதான் புகழ்பெற்ற லார்க்கின் செண்ட்ரல் (Larkin Sentral) எனும் பொதுப் பேருந்து முனையமும் உள்ளது.
தீபகற்ப மலேசியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து சேவைகள் உள்ளன. இங்கு இருந்து தாய்லாந்து, பாங்காக் நகரத்திற்கும்; சிங்கப்பூர் பெருநகரத்திற்கும்; மலாக்கா, கோலாலம்பூர், சிரம்பான், குவாந்தான், ஈப்போ, பினாங்கு, கோத்தா பாரு போன்ற பெரும் நகரங்களுக்கும்; செல்ல 24 மணிநேரப் பேருந்து சேவைகள் உள்ளன. அதனால் மக்கள் நெரிசல் எப்போதும் காணப்படுகிறது.[2]
லார்க்கின் பேருந்து நிலையம் ஜொகூர் பெருநகர மையத்திற்கு மிக அருகில் அமைந்து உள்ளது. ஜொகூர் பாருவில் உள்ள மிகப்பெரிய நிலையமாகும். தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பெரும்பகுதிக்கான மைய இடமாகும். ஒரே சமயத்தில் 50 பேருந்துகளை நிற்க வைக்கும் வகையில் மூன்று மாடிகளைக் கொண்ட வளாகமாகும்.[3]