லால் பகதூர் சாசுதிரி தேசிய விருது | |
---|---|
நாடு | இந்தியா |
வழங்குபவர் | லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனம் |
முதலில் வழங்கப்பட்டது | 1999 |
இணையதளம் | LBSIM official website |
லால் பகதூர் சாசுதிரி தேசிய விருது தில்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தினால் 1999 ஆண்டு நிறுவப்பட்டது. ஆண்டுதோறூம் வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதின் பரிசுப்பணம் 5,00,000 ரூபாய் ஆகும். இந்தப் பரிசுடன் மேற்கோள் மற்றும் பரிசுத் தட்டு வழங்கப்படுகிறது.
1999இல் தொடங்கப்பட்ட இந்த விருதானது வணிகத் தலைவர், மேலாண்மை பயிற்சியாளர், பொது நிர்வாகி, கல்வியாளர் அல்லது நிறுவனக் கட்டமைப்பாளருக்கு உயர் தொழில்முறை ஒழுங்கு மற்றும் சிறப்பான சாதனைகளுக்காகவும் தொடர்ச்சியான தனிப்பட்ட பங்களிப்புகளுக்காகவும் வழங்கப்படுகிறது.[1] இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.
வ. எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1999 | கோ. கி. பிரகலாத் |
2 | 2000 | சாம் பிட்ரோடா |
3 | 2001 | நா. ரா. நாராயணமூர்த்தி |
4 | 2002 | ரகுநாத் அனந்த் மசேல்கர் |
5 | 2003 | இலா பட் |
6 | 2004 | சி.பி.ஸ்ரீவாஸ்தவா [2] |
7 | 2005 | நரேஷ் தெரகான் |
8 | 2006 | மா. சா. சுவாமிநாதன் |
9 | 2008 | ஈ. சிறீதரன் |
10 | 2009 | ஸ்ரீ சுனில் பாரதி மிட்டல் |
11 | 2010 | அரூனா ரோய் |
12 | 2011 | யஷ் பால் |
13 | 2012 | டெஸ்ஸி தாமஸ் |
14 | 2013 | ராஜேந்திர அச்சியுத் பட்வே[3] |
15 | 2014 | சிவதாணு பிள்ளை [4] |
16 | 2015 | பிரணாய் ராய் |
17 | 2016 | கோபாலகிருஷ்ண காந்தி |
18 | 2017 | பிந்தேசுவர் பதக்கு |
19 | 2018 | பாலி சாம் நாரிமன் |
20 | 2019 | மஞ்சு சர்மா |
21 | 2020 | சுதா மூர்த்தி[5] |