லால்ஜி சிங் | |
---|---|
1992ல் லால்ஜி சிங் | |
பிறப்பு | 9 சூலை 1947 கல்வாரி, ஐக்கிய மாகாணம் (இன்றைய உத்தரப் பிரதேசத்தில்) |
இறப்பு | டிசம்பர் 10 2017 (அகவை 70) வாரணாசி |
வாழிடம் | ஐதராபாத்து (இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | அமராவதி[1] |
லால்ஜி சிங் (Lalji Singh, பிறப்பு: 5 சூலை 1947) ஓர் இந்திய விலங்கியலாளர். இந்தியாவின் தலைசிறந்த டிஎன்ஏ கைரேகைத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர். இவர் "இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் மூலக்கூறு அடிப்படையில் பாலினம் திட்டமிடுதல், வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வுத்துறை மற்றும் பரிணாம வளர்ச்சி மற்றும் புலம்பெயர்வு மனிதர்கள் போன்ற பல துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 25 ஆவது துணைவேந்தராக பணியாற்றினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆட்சிக்குழு தலைவராக ஆகஸ்ட் 2011 முதல் ஆகஸ்ட் 2014 வரையிலும், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (Centre for Cellular and Molecular Biology, CCMB) தலைவராக 1998 முதல் 2009 வரை பதவி வகித்தார்.[2] இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அறிக்கையானது “குரோமோசோமா” எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.[3]
{{cite AV media}}
: CS1 maint: unrecognized language (link)