லிங்கா Lingaa | |
---|---|
முதல் சுவரொட்டி | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ராக்லைன் வெங்கடேஸ் |
கதை | பொன் குமரன் |
திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | சம்ஜித் முகம்மது |
கலையகம் | ராக்லைன் எண்டர்டெய்ன்மெண்ட் |
விநியோகம் | ஈரோஸ் இன்டர்நேஷனல்[1] |
வெளியீடு | 12 டிசம்பர் 2014 [2] |
ஓட்டம் | 178 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹800 மில்லியன் (US$10 மில்லியன்)[3] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹1.54 பில்லியன் (US$19 மில்லியன்)[4] |
லிங்கா ஒரு தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கதில், ரஜினிகாந்த், சோனாக்சி சின்கா, அனுசுக்கா செட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார்.[5][6] இத்திரைப்படமானது ரஜனிகாந்தின் பிறந்தநாளான 12 டிசம்பர் 2014 அன்று வெளிவந்தது.[7][8] இப்படம் இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[9][10]
சோலையூர் கிராமத்தில் அமைந்துள்ள அணையானது உறுதியானது தானா என சோதனை செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் (பொன்வண்ணன்) வருகிறார். உள்ளூரைச் சேர்ந்த அமைச்சர் (நாகபூசன்) அது உறுதியில்லை என்று சான்று வாங்கி புதிய அணை கட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புகின்றார். அவர்கள் பொதுப்பணித்துறை பொறியாளரை கொலைசெய்து விடுகின்றனர். அவர் அவ்வூர் பெரியவரிடம் (கருணாகரன்) அணைப்பகுதியில் இருக்கும் சிவன் கோவிலை திறந்தால் அணையை காப்பாற்றலாம் என்று சொல்லி உயிர் விடுகிறார்.
அக்கோவிலை திறக்க அணையை கட்டிய மகாராசா லிங்கேசுவரனின் பேரனை அழைப்பது என்று முடிவெடுக்கின்றனர். அவர் பேரனின் பெயர் லிங்கா. அவர் எந்த சொத்தையும் விட்டுவைக்காமல் அழித்ததால் தனது தாத்தாவை வெறுக்கிறார். அதனால் அவர் சிறு சிறு குற்றங்கள் புரியும் திருடனாக உள்ளார். அவரை பெரியவரின் பேத்தி லட்சுமி (அனுஷ்கா செட்டி) கண்டுபிடித்து சோலையூருக்கு அழைக்கிறார். அவர் சோலையூர் செல்ல மறுக்கிறார். சூழ்நிலைகள் காரணமாக அவர் சோலையூர் செல்ல உடன்படுகிறார்.
சோலையூரில் தனது தாத்தாவைப் பற்றி அறிகிறார். பிரித்தானிய இந்தியாவில் கோட்டையூர் மகாராசாவாக இருந்த தனது தாத்தா பிரித்தானியரின் எதிர்புக்கிடையே இவ்வணையை கட்ட தனது சொத்துகள் அனைத்தையும் விற்றுவிடுகிறார். இதை அறியாத மக்கள் அவரை தவறாக புரிந்துகொண்டு சோலையூருக்கு வரக்கூடாது என்கின்றனர்.
இதை அறிந்த பேரன் லிங்காவிற்கு தனது தாத்தாவின்மேல் மரியாதை வருகிறது. இவ்வணையை தகர்க்க நினைக்கும் அமைச்சரின் செயல்களை மக்களுக்கு லிங்கா வெளிப்படுத்துகிறார், அணையையும் அவர்களின் சதியிலிருந்து காக்கிறார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் 2014 நவம்பர் 13 அன்று ஏ. ஆர். ரகுமான் வலைத்தளத்தில் வெளியானது.[11]
லிங்கா | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஓ நண்பா" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் | 04:24 | ||||||
2. | "என் மன்னவா" | வைரமுத்து | ஸ்ரீனிவாஸ், அதிதி பால் | 04:44 | ||||||
3. | "இந்தியனே வா" | வைரமுத்து | ஏ. ஆர். ரகுமான் | 06:03 | ||||||
4. | "மோனா கசோலினா" | மதன் கார்க்கி | மனோ, நீதி மோகன், தன்வி சா | 06:00 | ||||||
5. | "உண்மை ஒருநாள் வெல்லும்" | வைரமுத்து | ஹரிசரண் | 05:21 | ||||||
மொத்த நீளம்: |
26:35 |
லிங்கா [12] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஓ ரப்பா ரப்பா" | வானமாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:26 | ||||||
2. | "ஓ மன்மதா" | அனந்தா ஸ்ரீராம் | ஸ்ரீனிவாஸ், அதிதி பால் | 04:48 | ||||||
3. | "இந்தியன் நீ ரா" | சந்திர போஸ் | ஹரிசரண் | 06:09 | ||||||
4. | "மோனா மோனா" | காந்திகொண்டா | மனோ, நீதி மோகன் | 06:04 | ||||||
5. | "சத்யம் சிவாமு" | சுத்தலா அசோக் தேஜா | ஹரிசரண் | 05:22 | ||||||
மொத்த நீளம்: |
26:39 |
லிங்கா | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ரங்கா ரங்கா" | குல்சார் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜாஸ்பிரீத் சாஸ் | 04:26 | ||||||
2. | "சல்கே ரே" | குல்சார் | ஸ்ரீனிவாஸ், அதிதி பால் | 04:47 | ||||||
3. | "இந்தியா ரே" | குல்சார் | ஜாவத் அலி | 06:05 | ||||||
4. | "மோனா கசோலினா" | குல்சார் | மனோ, நீதி மோகன் | 06:04 | ||||||
5. | "தின் தூபா கய்" | குல்சார் | ஹரிசரண் | 05:24 | ||||||
மொத்த நீளம்: |
26:46 |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help); Italic or bold markup not allowed in: |publisher=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)