![]() | |
![]() Overview of the website's homepage in December 2020 | |
வலைத்தள வகை | மொழிசார் ஒலிப்பதிவு கருவி, இணைய மொழியியல்சார் ஊடகத் தொகுப்பு |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழியாமை |
உரிமையாளர் | பிரான்சிய விக்கிமீடியா |
உருவாக்கியவர் | பிரான்சிய விக்கிமீடியா, விக்கிமீடிய சமூகம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | பதிவு செய்து பதிவேற்ற தேவைப்படும் மற்றபடி தேவையில்லை |
உள்ளடக்க உரிமம் | Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0) |
வெளியீடு | ஆகத்து 2016 |
தற்போதைய நிலை | Active |
உரலி | lingualibre |
லிங்குவா லிப்ரே என்பது பிரான்சிய விக்கிமீடியாவின் இணைய கூட்டுத் திட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்ட சொற்களை ஒலிப்பதிவுச் செய்ய உதவும் கருவியாகும். இது கட்டற்ற உரிமத்தில் கூட்டுழைப்பு, பன்மொழியாமை, ஒலிக்கட்புலத் தரவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது விரைவாக ஒலிப்பை பதிவு செய்ய உதவுகிறது, இது பயனர்களை நூற்றுக்கணக்கிலான கோப்புகளை பதிவேற்ற அனுமதிக்கிறது. இதில் பங்களிப்பாளர்கள் 250 மேற்பட்ட மொழிகளில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கியுள்ளனர்.
லிங்குவா லிப்ரே எந்த ஒரு மொழியின் சொற்கள், சொற்றொடர்களையும் பதிவு செய்யும். பேசப்படும் மொழியாக இருந்தால் ஒலிபதிவாகவும், சைகை மொழியாக இருந்தால் நிகழ்படமாக பதிவு செய்து உதவுகிறது.
பதிவாளருக்கு ஒரு சொற்கள் பட்டியல் வழங்கப்படுகின்றன, சுயமாகவோ, விக்கிமீடியப் பகுப்புகளைக் கொண்டோ சொற்பட்டியலை உருவாக்கலாம். பதிவாளர் வெறுமனே திரையில் காட்டப்படும் சொல்லைப் படித்து, ஒரு நொடி அமைதி காக்கும் போது அதை கண்டறிந்து மென்பொருள் சொற்பட்டியில் உள்ள அடுத்த சொல்லிற்கு செல்லும்.[1] இந்த முறைமை, திறந்த மூல மென்பொருளான ச்டூகா (Shtooka) இலிருந்து கொண்டுவரப்பட்டது. இதனின் உருவாக்குநர் நிக்கோலசு வியோனியால் ஒரு மணி நேரத்திற்கு பல நூற்றுக்கணக்கான சொற்களைப் பதிவுசெய்வது சாத்தியமாகியது. பதிவுகள் வலை நுகர்வியிலிருந்து விக்கிமீடியப் பொதுவகத்துக்கு தானாகவே பதிவேற்றப்படும்.
2021 வசந்த காலத்தில், இசுதிராசுபூர்க்க்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக லிங்குவா லிப்ரே முடக்கநிலையில் இருந்தது, ஆனால் பதிவுகள் எதுவும் இழக்கப்படவில்லை.[2]
பதிவுகளை லிங்குவா லிப்ரே அல்லது பொதுவகத்தில் இருந்து பயன்படுத்தப்படலாம். இவை முக்கியமாக மற்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விக்சனரிகளில் சொற்களின் ஒலிப்பை விளக்குவதற்கும், விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் பெயர்களை சரியான மூலமொழி ஒலிப்பை விளக்குவதற்கும் பயன்படுகிறது.[1]
மொழி கற்பித்தல் சூழலில் பதிவுகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொழி கற்பவர்கள், ஒலிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பிரபலமான அகராதி மென்பொருளான கோல்டன்டிக்ட்-இல் (GoldenDict) பயன்படுத்தலாம்.[3]
இயற்கை மொழி முறையாக்கத்திட்டங்களிலும் இப்பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக மொசில்லாவின் பேச்சுணரி கருவிகளை இயக்குவதற்கு பயன்படும்.[4]
சனவரி 23, 2015 அன்று லிங்குவா லிப்ரே தொடங்கப்பட்டது.[5] மூன்று தொடர்ச்சியான பதிப்புகளைக் கொண்டுள்ளது:
பிரான்சின் மொழிகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்கிமீடியா மற்றும் பொதுவாக இணையத் திட்டங்களில் பிரான்சின் பிராந்திய மொழிகளை ஆவணப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, Lingua Libre லிங்குவா லிப்ரே கருத்தாக்கம் நவம்பர் 2015 இல் தொடங்கியது, இதில் மொழிக்கான பொது பிரதிநிதிகள் குழு மூலம் ஓரளவு நிதியளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் பதிப்பு ஆகத்து 2016 இல் வெளியிட்டது.
அப்போது ஒலிப்பதிவுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருந்தது, லிங்குவா லிப்ரே திசம்பர் 2016 இல் ஓக் மொழி குறித்த பட்டறையின் போது காட்டப்பட்டது,[6][7] பின்னர் 2017 இல் சர்வதேச நிகழ்வுகளில் இணையத்தில் விக்கிமீடிய சமூகத்துக்கு வழங்கப்பட்டது.[8]
2017 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு முழுமையான மறுகட்டமைப்பு லிங்குவா லிப்ரேயில் தொடங்கப்பட்டது. லிங்குவா லிப்ரேயின் புதிய பதிப்பு மீடியாவிக்கியை அடிப்படையாகக் கொண்டது, விக்கிமீடிய சூழலைச் சிறப்பாக ஒருங்கிணைக்க விக்கித்தளம் (Wikibase), திறந்த உரிமை நல்குதலை (OAuth) பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டது. இடைமுகம் Translatewiki.net வழியாக மொழிபெயர்க்க கொண்டுவரப்பட்டது, இதனால் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான சமூகங்கள் பயன்படுத்தி மொழிபெயர்க்க முடியும். தளத்தின் புதிய பதிப்பு சூன் 2018 [9] இல் தயாராகி, ஆகத்து 2018 இல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
2020 இல், முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன; குறிப்பாக தளத்திற்கு ஒரு புதிய இடைமுகத் தோற்றம் உருவாக்கப்பட்டது, .fr என்று பயன்படுத்தப்பட்ட களப்பெயர் .org என்று மாற்றியது,[10] நிகழ் படங்களை பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு சைகை மொழிகளுக்கான ஆதரவையும் சேர்த்தது.