லிடா ஏ. நியூமேன் Lyda D. Newman | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
பணி | புதுமைப்புனைவாளர் |
செயற்பாட்டுக் காலம் | உரிமம் 1898 நவம்பர் 15இல் தரப்பட்ட்து. |
அறியப்படுவது | வெளியில் எடுத்து தூய்மை செய்யவல்ல முடித் தூவி |
லிடா ஏ. நியூமேன் (Lyda D. Newman) ஓர் அமெரிக்கப் புதுமைப்புனைவாளர். இவர் எளிதாக வெளியில் எடுத்து தூய்மை செய்யவல்ல முடித் தூவியைக் கண்டுபிடித்தார். இவருக்கு அதற்கான உரிமம் 1898 நவம்பர் 15இல் வழங்கப்பட்ட்து.. இது அமெரிக்கா உரிமம்614,335 ஆகும். இவர் இந்தக் கண்டுபிடிப்பில் மதாம் வாக்கர்,மார்ஜோரி ஜாய்னர் அகிய இரு ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்களின் முடித் தூய்மைபேணும் பங்களிப்பிற்கும் முந்தியவர்.
நியூமேன் நியூ யார்க் நகரில் உள்ள மன்ஃஆட்டனில் வாழ்ந்து அங்கேயே பணிபுரிந்தவர். இவர் புனைந்த முடித் தூவி கட்டுகோப்பில் எளியதும் நீடித்து உழைக்க்க் கூடியதுமாகும். மேலும் பயன்படுத்த வாட்டமானதகவும் அமைந்த்து. தூவியின் அகன்றுபிரிந்த காடிகள் முடிவாரப் பாய்வோட்டங் கூடியதக இருந்தது. அவரது சொந்த வாழ்க்கையைக் குறித்து ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி என்பதாலும் அவர் காலத்தில் கருப்பர் குறித்தோ பெண்கள் குறித்தோ விரிவான வரலாறு எழுதும் வழக்கம் இல்லை என்பதாலும் இந்நிலை ஏற்பட்டது எனலாம்.[1][2][3]