லிப்பிஸ் (P079) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Lipis (P079) Federal Constituency in Pahang | |
லிப்பிஸ் மக்களவைத் தொகுதி (P079 Lipis) | |
மாவட்டம் | லிப்பிஸ் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 47,124 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | லிப்பிஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா லிப்பிஸ் |
பரப்பளவு | 3,004 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அப்துல் ரகுமான் முகமது (Abdul Rahman Mohamad) |
மக்கள் தொகை | 67,853 (2020) [3] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லிப்பிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lipis; ஆங்கிலம்: Lipis Federal Constituency; சீனம்: 立卑国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், லிப்பிஸ் மாவட்டத்தில் (Lipis District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P079) ஆகும்.[5]
லிப்பிஸ் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து லிப்பிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
லிப்பிஸ் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா லிப்பிஸ். பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது.
பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து 235 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் உள்ளது.
லிப்பிஸ் மாவட்டத்திற்கு மேற்கில் கேமரன் மலை, கிழக்கில் ஜெராண்டுட்; வடக்கில் ரவுப் ஆகிய நகரங்கள் உள்ளன. அத்துடன் கிழக்கில் பேராக் மாநிலம்; வடக்கில் கிளாந்தான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
கோலா லிப்பிஸ் நகரம் 1898-ஆம் ஆண்டில் இருந்து 1955-ஆம் ஆண்டு வரை 57 ஆண்டுகளுக்கு பகாங் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் குவாந்தான் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஈயம், தங்கம் போன்ற கனிமங்கள் மற்றும் காட்டுப் பொருட்களின் விளைச்சல்களுக்கு லிப்பிஸ் மாவட்டம் பெயர் பெற்றது.
லிப்பிஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் லிப்பிஸ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P064 | 1959–1962 | முகமது சூலோங் முகமது அலி (Mohamed Sulong Mohd Ali) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1962–1963 | அப்துல் ரசாக் உசின் (Abdul Razak Hussin) | |||
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P064 | 1963–1964 | அப்துல் ரசாக் உசின் (Abdul Razak Hussin) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[7] | |||
3-ஆவது மக்களவை | P064 | 1971–1972 | அப்துல் ரசாக் உசின் (Abdul Razak Hussin) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1972–1973 | கசாலி சாபி (Ghazali Shafie) | |||
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P065 | 1974–1978 | ||
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P072 | 1986–1990 | வாங் சூன் விங் (Wang Choon Wing) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | சான் கோங் சோய் (Chan Kong Choy) | ||
9-ஆவது மக்களவை | P075 | 1995–1997 | அபு தராரி ஒசுமான் (Abu Dahari Osman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
1997–1999 | அமிஅம்சா அகமது (Amihamzah Ahmad) | |||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P079 | 2004–2008 | முகமது சாரும் ஒசுமான் (Mohamad Shahrum Osman) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அப்துல் ரகுமான் முகமது (Abdul Rahman Mohamad) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
பாரிசான் நேசனல் | அப்துல் ரகுமான் முகமது (Abdul Rahman Mohamad) |
17,672 | 49.29% | 0.53% ▼ | |
பெரிக்காத்தான் நேசனல் | முகமது சாரும் ஒசுமான் (Mohamad Shahrum Osman) |
11,554 | 32.22% | 32.22% | |
பாக்காத்தான் அரப்பான் | தெங்கு சுல்புரி சா ராஜா புஜி (Tengku Zulpuri Shah Raja Puji) |
6,366 | 17.75% | 8.68% ▼ | |
தாயக இயக்கம் | அயிசாதுன் அபு பக்கர் (Aishaton Abu Bakar) |
263 | 0.76% | 0.76% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 35,855 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 388 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 100 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 36,343 | 76.09% | 5.13 % ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 47,124 | ||||
பெரும்பான்மை (Majority) | 6,118 | 17.07% | 6.31% ▼ | ||
பாரிசான் நேசனல் | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)