லிம்ப்டி சமஸ்தானம் લીંબડી રિયાસત | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள சுரேந்திர மாவட்டத்தில் லிம்ப்டி சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | c. 1500 | |||
• | இந்திய விடுதலை | 1947 | |||
Population | |||||
• | 1931 | 40,688 |
லிம்ப்டி சமஸ்தானம் (Limbdi State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் லிம்ப்டி நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள சுரேந்திரநகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையில் இருந்த லிம்ப்டி சமஸ்தானம் 632 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 40,688 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் பாலிதானா சமஸ்தானம் குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
ஏறத்தாழ 1500-ஆம் நிறுவப்பட்ட லிம்படி சமஸ்தானம்[1] மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற லிம்படி சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையின் கீழ் இருந்தது. லிம்படி சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி லிம்படி சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் சௌராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[2][3][4][5]பின்னர் 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்ப்பட்டது. மீண்டும் சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.