லிராய் அப்கர் விருது LeRoy Apker Award | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | இளங்கலை மாணவர்களால் இயற்பியலில் சிறந்த சாதனைகள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அமெரிக்க இயற்பியல் கழகம் |
முதலில் வழங்கப்பட்டது | 1978 |
இணையதளம் | www |
லிராய் அப்கர் விருது (LeRoy Apker Award) என்பது 1978-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அமெரிக்க இயற்பியல் கழகத்தால் வழங்கப்படும் பரிசு ஆகும். இப்பரிசு செய்முக இயற்பியலாளரான லிராய் அப்கர் என்பவரின் பெயரைக்கொண்டு வழங்கப்படுகிறது. இளங்கலை இயற்பியலில் உயர்சாதனை படைத்த மாணவர்களையும், எதிர்கால அறிவியல் சாதனைக்கு சிறந்த திறனை வெளிபடுத்திய இளம் இயற்பியலாளர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்காவில் இளங்கலை இயற்பியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான பரிசு ஆகும். பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒன்று முனைவர் பட்ட ஆய்வு நிறுவனத்தில் பயிலும் ஒரு மாணவருக்கும், மற்றொன்று முனைவரல்லாத பிற பட்டத்திற்காகப் பயிலும் ஒரு மாணவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடைபெறும் விழாவின்போது 5000 டாலர் ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.[1]