லீலா சாம்சன் (Leela Samson, பிறப்பு 1951) ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். தனது கலைநுட்பத் திறனுக்குப் பெயர் பெற்ற லீலா தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரத்தில் பல ஆண்டுகள் கற்பித்து வந்தார்;[2] தற்போது ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய கலாசேத்திராவின் இயக்குனராகவும் (ஏப்ரல் 2005), இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதெமியான சங்கீத நாடக அகாதெமியின் தலைவராகவும் (2010- ) பணியாற்றி வருகிறார்.[3] கலாசேத்திராவில் இவர் பதவி வகிப்பது தொடர்பாக இவர் தகுதியற்ற முறையில் உள்நோக்கத்துடன் இப்பதவியை அடைந்தார் என சர்ச்சைகள் எழுந்தன.[4] 2011ஆம் ஆண்டு இந்திய திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக சர்மிளா தாக்கூரை அடுத்து நியமிக்கப்பட்டார்.[5]