லுபோக் அந்து மாவட்டம் Lubok Antu District Daerah Lubok Antu | |
---|---|
ஆள்கூறுகள்: 1°3′0″N 111°50′0″E / 1.05000°N 111.83333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரி அமான் பிரிவு |
மாவட்டங்கள் | லுபோக் அந்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,142.55 km2 (1,213.35 sq mi) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 45,892 |
• அடர்த்தி | 15/km2 (38/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 95900 |
தொலைபேசி எண்கள் | +6083 |
இணையதளம் | Laman web rasmi Majlis Daerah Lubok Antu |
லுபோக் அந்து மாவட்டம் (மலாய் மொழி: Daerah Lubok Antu; ஆங்கிலம்: Lubok Antu District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; செரி அமான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். லுபோக் அந்து மாவட்டத்தின் நிர்வாக நகரம் லுபோக் அந்து நகரம் ஆகும்.[1]
லுபோக் அந்து மாவட்டத்தின் பரப்பளவு 3,142 சதுர கிலோமீட்டர்கள் (1,213 சதுர மைல்); 2023-இல் அதன் மொத்த மக்கள் தொகை 45,892 ஆகும். மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்கள் இபான் மக்கள். இந்த மாவட்டத்தில் முக்கியப் பொருளாதார நடவடிக்கை வேளாண்மை ஆகும்.[2]
இந்த மாவட்டம் இந்தோனேசியாவின் எல்லையில் உள்ளது; மற்றும் மலேசிய எல்லையைக் கடக்கும் சோதனைச் சாவடி இங்கு அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள சோதனைச் சாவடி; மேற்கு கலிமந்தானின் படாவ் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்தச் சாவடி, நங்கா படாவ் எல்லை கடக்கும் சோதனைச் சாவடி என்று அழைக்கப்படுகிறது.
பத்தாங் ஆய் ஆறு (Batang Ai) இந்த மாவட்டத்தின் வழியாக ஓடுகிறது. கம்போங் பாசிர் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு தொங்கு பாலம் உள்ளது.[3] 1985-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஓர் அணையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரக் கணக்கான மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.[3]
அதனால் அவர்கள் இடம்பெயர்ந்தனர்.[2] 2018-இல் நங்கா கெசிட் (Nanga Kesit) கிராமத்தில் உள்ள ஒரு தொங்கு பாலம் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்தது.[4]
1956-ஆம் ஆண்டு சரவாக் மாநில அரசாங்கத்தின் ஊராட்சி சட்டத்தின் கீழ் (State Government's Local Authorities Ordinance, 1956) லுபோக் அந்து மாவட்ட மன்றம் உருவாக்கப்பட்டது. இந்த மன்றம் தற்போது லுபோக் அந்து மாவட்டத்தை நிர்வகித்து வருகிறது.[5]
லுபோக் அந்து மாவட்ட இனக் குழுக்களின் விவரங்கள் (2023)[3]
இனம் | மொத்தம் |
---|---|
மலாய் மக்கள் | 1,087 |
இபான் | 31,885 |
பிடாயூ | 830 |
மெலானாவ் | 116 |
சீனர் | 5,882 |
இதர பூமிபுத்ரா | 1,254 |
இந்தியர்கள் | 825 |
மற்றவர்கள் | 1,623 |
மலேசியர் அல்லாதவர் | 2,390 |
மொத்தம் | 45,892 |
லுபோக் அந்து வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் மிக அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், லுபோக் அந்து | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
30.1 (86.2) |
30.9 (87.6) |
31.5 (88.7) |
32.0 (89.6) |
31.8 (89.2) |
31.6 (88.9) |
31.4 (88.5) |
31.4 (88.5) |
31.1 (88) |
30.9 (87.6) |
30.5 (86.9) |
31.09 (87.97) |
தினசரி சராசரி °C (°F) | 26.0 (78.8) |
26.2 (79.2) |
26.7 (80.1) |
27.0 (80.6) |
27.5 (81.5) |
27.2 (81) |
26.8 (80.2) |
26.8 (80.2) |
26.9 (80.4) |
26.7 (80.1) |
26.6 (79.9) |
26.3 (79.3) |
26.73 (80.11) |
தாழ் சராசரி °C (°F) | 22.2 (72) |
22.3 (72.1) |
22.6 (72.7) |
22.6 (72.7) |
23.0 (73.4) |
22.6 (72.7) |
22.1 (71.8) |
22.2 (72) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.2 (72) |
22.42 (72.35) |
மழைப்பொழிவுmm (inches) | 446 (17.56) |
349 (13.74) |
326 (12.83) |
235 (9.25) |
227 (8.94) |
217 (8.54) |
181 (7.13) |
252 (9.92) |
284 (11.18) |
296 (11.65) |
309 (12.17) |
434 (17.09) |
3,556 (140) |
ஆதாரம்: Climate-Data.org[6] |