லும்பினி பூங்கா | |
---|---|
![]() | |
![]() | |
வகை | நகர்ப்புறப் பூங்கா |
அமைவிடம் | ஹுசைன் சாகர், ஐதராபாத், இந்தியா |
ஆள்கூறு | 17°24′36″N 78°28′20″E / 17.410°N 78.4722°E |
பரப்பளவு | 7.5 ஏக்கர்கள் (3.0 ha) |
உருவாக்கம் | 1994 |
இயக்குபவர் | புத்த பூர்ணிமா புராஜெக்ட் அத்தாரிட்டி |
நிலை | ஆண்டு முழுவதும் |
லும்பினி பூங்கா ஆந்திரமாநிலம் ஹைதராபாத்தில் ஹுசைன் சாகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். பிர்லா மந்திர், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ள இது ஹைதராபாத் நகரின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு உயரமான புத்தர் சிலை, லேசர் அரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த புத்தர் சிலை தமிழ்நாட்டைச் சேர்ந்த கணபதி சிற்பி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. 2007 ஆகஸ்ட் 25-ல் இந்த பூங்கா தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர்.[1][2][3]