லூனாவாடா சமஸ்தானம் | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
தற்கால குஜராத் மாநிலத்தில் ரேவா கந்தா முகமையில் ஊதா நிறத்தில் லூனாவாடா சமஸ்தானம் | ||||||
தலைநகரம் | லூனாவாடா | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1434 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
Population | ||||||
• | 1901 | 63,967 | ||||
தற்காலத்தில் அங்கம் | லூனாவாடா தாலுகா, மகிசாகர் மாவட்டம், குஜராத், இந்தியா |
லூனாவாடா சமஸ்தானம் (Lunavada State), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் லூனாவாடா நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தின் லூனாவாடா தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1921-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையில் இருந்த லூனாவாடா சமஸ்தானம் 1005 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 63,962 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் லூனாவாடா சமஸ்தானம் இந்தியாவுடன் இணக்கப்பட்டது.
1674-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குலத்தின் சோலாங்கி வம்சத்தின் வீர் சிங் என்பவரால் மாகி ஆற்றின் கரையில் நிறுவப்பட்டது லூனாவாடா சமஸ்தானம். பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற லூனாவாடா சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் இருந்தது. லூனாவாடா சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பாலசினோர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1960-ஆம் ஆண்டில் லூனாவாடா சமஸ்தானம் புதிய குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.