லூரம்பம் ப்ரோசேசோரி தேவி, (1 ஜனவரி 1981 – 21 ஜூலை 2013) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த யுடோ விளையாட்டு வீராங்கனையாவர். 2000 ஆவது ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் யுடோ விளையாட்டில் போட்டியிட்டதன் மூலம் விளையாட்டு துறையில் பிரபலமாகியுள்ளார். [1] [2]
ப்ரோசேசோரி தேவி, ஜனவரி 1, 1981 அன்று, மணிப்பூரின் மேற்கு இம்பாலில் உள்ள காகேம்பள்ளி ஹுய்ட்ரோம் லைகாயை சேர்ந்த லூரம்பம் மங்லெம் சிங் மற்றும் லூரம்பம் ஓங்பி தருணி தேவியின் மகளாகப் பிறந்துள்ளார். பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, சிறு வயதிலிருந்தே யுடோவில் பயிற்சி பெறத் தொடங்கியுள்ள இவர், பள்ளி நாட்களிலேயே யுடோ போட்டிகளில் பங்கேற்கவும் தொடங்கியுள்ளார். இம்பால் அருகே உள்ள தபுங்ஹோக்கில் வசிக்கும் ரோஜென் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ப்ரோசேசோரி, இருபதிற்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் பதினைந்துக்கும் மேற்பட்ட தேசிய யுடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச அளவில் ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களைத் தவிர மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். [3] 2000 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் அரை-இலகு எடை பிரிவில் பங்கேற்ற இவர், சீனாவின் லியு யுக்சியாங்கிற்கு எதிராக அரையிறுதியை எட்டினாலும் வெற்றி பெற இயலவில்லை.
ப்ரோசேசோரி, மத்திய சேமக் காவல் படை பிரிவின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் 21 ஜூலை 2013 அன்று இந்தியாவின் தமிழ்நாடு, கோயம்புத்தூரில் கர்ப்பம் தொடர்பான அதீத இரத்தப்போக்கின் காரணமாக மரணித்துள்ளார். [4] [5]