லெம்பா பந்தாய் (P121) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Lembah Pantai (P121) Federal Constituency in Kuala Lumpur | |
![]() | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 101,828 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | லெம்பா பந்தாய் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; லெம்பா பந்தாய், பங்சார், பந்தாய் டாலாம், புக்கிட் அமான், பெர்டானா தாவரவியல் பூங்கா |
பரப்பளவு | 20 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | அகமது பகமி முகமது பட்சில் (Ahmad Fahmi Mohamed Fadzil) |
மக்கள் தொகை | 148,094 [3] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lembah Pantai; ஆங்கிலம்: Lembah Pantai Federal Constituency; சீனம்: 武吉免登国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P121) ஆகும்.
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். லெம்பா பந்தாய்க்கு அருகில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் செபுத்தே மக்களவைத் தொகுதி, சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மற்றும் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி.
லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் மிகவும் பிரபலமான பகுதிகளில் பங்சார் தொகுதியும் ஒன்றாகும். இந்தப் பகுதி ஒரு பிரபலமான மேல்நிலை குடியிருப்பு பகுதி; மற்றும் ஒரு பொழுதுபோக்கு பகுதியும் ஆகும்.
பந்தாய் டாலாம் (Pantai Dalam) என்பது பங்சார் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு குடியிருப்பு பகுதி. பந்தாய் டாலாம் பகுதியில் பெரிய குடியிருப்புப் பகுதிகளும்; பல சிறிய குடியிருப்புப் பகுதிகளும் கலந்து உள்ளன. அவற்றின் பட்டியல்:
தித்திவங்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் டாமன்சாரா மக்களவைத் தொகுதியில் இருந்து லெம்பா பந்தாய் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P100 | 1986–1990 | அப்துல் ரசாக் சாமா (Abdul Razak Samah) |
பாரிசான் அம்னோ |
8-ஆவது மக்களவை | 1990–1995 | முகமது கமல் உசேன் (Mohamed Kamal Hussain) | ||
9-ஆவது மக்களவை | P109 | 1995–1999 | சாரிசாத் அப்துல் ஜலீல் (Shahrizat Abdul Jalil) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P121 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) |
பாக்காத்தான் ராக்யாட் பி.கே.ஆர் | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாமி பட்சில் (Fahmi Fadzil) |
பாக்காத்தான் பி.கே.ஆர் | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
101,828 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
77,469 | 76.08% | ▼ -8.12% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
76,714 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
240 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
515 | ||
பெரும்பான்மை (Majority) |
13,912 | 18.13% | ![]() |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5][6] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
பாமி பட்சில் (Fahmi Fadzil) |
பாக்காத்தான் | 76,714 | 35,359 | 46.09 % | -4.15% ▼ | |
ரம்லான் சாயான் அசுகோலான் (Ramlan Shahean Askolani) |
பாரிசான் | - | 21,447 | 27.96% | -13.84% ▼ | |
பவுசி அபு பக்கார் (Fauzi Abu Bakar) |
பெரிக்காத்தான் | - | 19,098 | 24.90% | +24.90% ![]() | |
நூர் அசுமா முகமது ரசாலி (Noor Asmah Mohd Razalli) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA / PEJUANG) |
810 | 1.06% | +1.06 ![]() |