லேடாங் (P144) மலேசிய மக்களவை தொகுதி ஜொகூர் | |
---|---|
Ledang (P144) Federal Constituency in Johor | |
லேடாங் மக்களவைத் தொகுதி (P144 Ledang) | |
மாவட்டம் | தங்காக் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 104,577 (2020)[1][2] |
வாக்காளர் தொகுதி | லேடாங் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கம்பிர், தங்காக்; செரோம், சாகில், |
பரப்பளவு | 653 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சையட் இப்ராகிம் சையட் நோ (Syed Ibrahim Syed Noh) |
மக்கள் தொகை | 147,549 (2022)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
லேடாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ledang; ஆங்கிலம்: Ledang Federal Constituency; சீனம்: 礼让国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P144) ஆகும்.[5]
லேடாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து லேடாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தங்காக் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தங்காக் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
தங்காக் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 136 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 180 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவை தங்காக் மாவட்டத்தின் எல்லை மாநிலங்களாக உள்ளன.
மலேசியாவில் பிரபலமான குனோங் லேடாங், இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரமான தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. லேடாங் மலை வரலாற்றுப் புகழ் பெற்றது.[7]
லேடாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லேடாங் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P103 | 1974–1978 | எம்போங் யகாயா (Embong Yahya) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | நிகா அப்துல் ரகுமான் (Ngah Abdul Rahman) | ||
7-ஆவது மக்களவை | P116 | 1986–1990 | கனி ஒசுமான் (Ghani Othman) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P126 | 1995–1999 | அசீம் இசுமாயில் (Hashim Ismail) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P144 | 2004–2008 | அமிம் சமுரி (Hamim Samuri) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | சையட் இப்ராகிம் சையட் நோ (Syed Ibrahim Syed Noh) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சையட் இப்ராகிம் சையட் நோ (Syed Ibrahim Syed Noh) | பாக்காத்தான் அரப்பான் | 33,650 | 41.90 | 11.16 ▼ | |
அமிம் சமுரி (Hamim Samuri) | பாரிசான் நேசனல் | 23,881 | 29.74 | 10.06 ▼ | |
சாயிடி அப்துல் மஜீத் (Zaidi Abd Majid) | பெரிக்காத்தான் நேசனல் | 22,292 | 27.76 | 27.76 | |
ரபிடா ரிசுவான் (Rafidah Ridwan) | தாயக இயக்கம் | 269 | 0.33 | 0.33 | |
இயூனுஸ் முசுதாகிம் (Yunus Mustakim) | சுயேச்சை | 140 | 0.17 | 0.17 | |
சைனல் பகரூம் காதிர் (Zainal Bahrom A. Kadir) | சுயேச்சை | 75 | 0.09 | 0.99 | |
மொத்தம் | 80,307 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 80,307 | 98.75 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,019 | 1.25 | |||
மொத்த வாக்குகள் | 81,326 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,04,577 | 76.79 | 9.31 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)