லேடி காஷ்

லேடி காஷ்
பிறப்புலேடி காஷ்
சிங்கப்பூர்
இருப்பிடம்சிங்கப்பூர்
பணிபாடகி
செயற்பாட்டுக்
காலம்
2007—தற்போது

லேடி காஷ் எனப்படுபவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு சொல்இசைக் கலைஞராவார். 2007 முதல் இவர் சொல்லிசைப் பாடல்களைப் பாடுவதை தொழில்முறையாக மேற்கொண்டுவருகின்றார். இவரின் இயற்பெயர் கலைவாணி நாகராஜ் ஆயினும் லேடி காஷ் எனும் பெயரைத் தனது இசைப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுத்தார். 2008இல் கிருஷ்ஷி எனும் பாடகிகை தன்னுடன் இணைத்துக்கொண்டார். இருவரின் கூட்டை லேடி காஷ் மற்றும் க்ரிசி என்று பிரபலமாக அறியப்பட்டது. ஆயினும் 2012இன் இறுதிகளில் லேடி காஷ் இந்த இரட்டடையர் குழுவில் இருந்து பிரிந்து தனது தனிப்பட்ட பாடல்களை பாடும் முயற்சியில் தொடர்ந்தார்.

லேடி காஷ் பல பிரபலமான இசை மேதைகளுடன் இது வரை பணியாற்றியுள்ளார். இவர்களில் ஹாரிஸ் ஜெயராஜ், ஜோஷ்ஷா ஸ்ரீதர் மற்றும் ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் அடங்குகின்றனர். 2010 இல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.