லைஃப் ஆஃப் எ கிங் Life of a King | |
---|---|
இயக்கம் | ஜேக் கோல்ட்பெர்கர் |
தயாரிப்பு | டாடியானா கெல்லி ஜிம் யங் |
கதை | ஜேக் கோல்ட்பெர்கர் டேவிட் ஸ்காட் டான் வெட்செல் |
இசை | எரிக் வி. அச்சிகின் |
நடிப்பு | கியூபா குடிங் ஜூனியர். டென்னிஸ் ஹேஸ்பெர்ட் லிசாகே ஹாமில்டன் |
ஒளிப்பதிவு | மார்க் ஸ்வார்ட்ஸ்பார்ட் |
படத்தொகுப்பு | ஜூலி கார்செஸ் |
கலையகம் | மில்லினியம் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | சூன் 22, 2013(லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா) சனவரி 17, 2014 (அமெரிக்கா) |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
மொத்த வருவாய் | $44,000(ww)[1] |
லைஃப் ஆஃப் எ கிங் (Life of a King) என்பது ஜேக் கோல்ட்பெர்கர் இயக்கிய 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். இப் படத்தில் கியூபா குடிங் ஜூனியர், டென்னிஸ் ஹேஸ்பெர்ட், லிசாகே ஹாமில்டன் ஆகியோர் நடித்துள்ளனர் .
இளமையில் செய்த ஒரு குற்றச் செயலுக்காக 20 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டு 45 வயதில் வெளியே வருகிறார் யூஜின் (கியூபா குடிங் ஜூனியர்). சிறையில் இருந்து வந்தவர் என்பதால் வாழ்க்கை கடினமானதாக இருக்கிறது. பல சிரமங்களுக்கு இடையில் வாசிங்டன் சிடி உயர்நிலைப்பளியில் பாதுகாவலர் பணியில் சேர்கிறார். அங்கே பதின்மத்தின் இறுதியில் உள்ள மாணவர்கள் பலர் போதைப் பொருட்களை பாவித்தல், குற்ற உலகுடன் தொடர்பு கொள்ளுதல் என அவர்களின் எதிர்காலத்தை தொலைக்கும் நிலையில் உள்ளனர்.
சிறுவயதில் தன்னை யாரும் ஆற்றுப்படுத்தாத்தால் தன் வாழ்வு தலை கீழாக ஆனதைப்போல இவர்கள் வாழ்வும் ஆகக்கூடாது என எண்ணுகிறார். அந்த மாணவர்களை அதிலிருந்து மீட்க ஒரு திட்டம் வகுக்கிறார். ஒரு வாடகைக் கட்டடத்தில் சதுரங்க விளையாட்டு மையத்தை உருவாக்குகிறார். சிறையில் தான் கற்றுக் கொண்ட சதுரங்க நுட்பத்தை வழி மாறிப்போகும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். அதன் வழியாக அவர்களின் கவனத்தை திசைத் திருப்புகிறார். இவ்வாறு அவரிடம் பயிற்சி பெற்ற மாணவனான தஹிம் (மால்கம் மேஸ்) அமெரிக்க கிராண்டு மாஸ்டர் வாகையரில் கௌரவமான தோல்வியடைந்து பாராட்டுகளைப் பெறுகிறான்.
இந்தத் திரைப்படம் 2013 லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கான அமெரிக்க வெளியீட்டை 2014 சனவரி 17 அன்று மில்லினியம் என்டர்டெயின்மெண்ட் வெளியிட்டது. [4] [5]
லைஃப் ஆஃப் எ கிங் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வாசிங்டன் போஸ்ட் இப்படத்திற்கு நான்கு நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரங்களை வழங்கியது. விமர்சகர்களின் மதிப்புரைகளின் அடிப்படையில் 100க்கு 52 மதிப்பீட்டை மதிப்பாய்வு திரட்டல் இணையதளமான Metacritic வழங்கியது. [6]