லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் (2012 திரைப்படம்)

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
இயக்கம்சேகர் கம்முலா
தயாரிப்புசேகர் கம்முலா
சந்திரசேகர் கம்முலா
கதைசேகர் கம்முலா
இசைமிக்கி மேயர்
நடிப்பு
ஒளிப்பதிவுவிஜய் சி. குமார்
படத்தொகுப்புமார்த்தாண்ட் கே. வெங்கடேஷ்
கலையகம்அமிகோஸ் கிரியேஷன்ஸ்
விநியோகம்ஃபிகஸ் (வெளிநாடுகளில்)[1]
வெளியீடு14 செப்டம்பர் 2012 (2012-09-14)
ஓட்டம்208 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
மொத்த வருவாய்17.5 கோடி (US$2.2 மில்லியன்)(17 நாட்களில்) [2]
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (Life Is Beautiful) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம். இதை சேகர் கம்முலா, சந்திரசேகர் கம்முலா ஆகியோர் கூட்டாக இயக்கியுள்ளார்.[3] சிரேயா, அஞ்சலா சவேரி, அமலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[4][5]

கதை

[தொகு]

மூன்று நாயகர்களும் நாயகிகளையும் கொண்ட கதை. மூன்று நாயகர்களும் நண்பர்கள். மூவரில் ஒருவனான சீனு, தன் மூத்த தங்கை, இளைய தங்கை, தன் அம்மா ஆகியோருடன் வாழ்கிறான். அம்மாவின் பணியிடமாற்றம் காரணமாக, தன் பாட்டி வீட்டிற்கு இளைய, மூத்த தங்கைகளுடன் செல்கிறான். அங்கே மற்ற இரு கதாநாயகர்களும், அறிமுகமாக, நண்பர்களாக இணைகிறார்கள். நாயகர்கள் தங்களின் நாயகிகளை காதலிக்கிறார்கள். இயல்பான இளைஞர்களைக் கொண்டு கதை நகர்கிறது. நட்பு, காதல் ஆகியவற்றை முதன்மைப்படுத்திய கதை இது.

நடிப்பு

[தொகு]
  • சிரேயா - பார்வதி (பாரு)
  • அஞ்சலா சவேரி - மாயா
  • அமலா - அம்மா
  • அபிஜீத் துத்தலா - சீனிவாசன்
  • சுதாகர் கோமகுலா - நாகராஜ்
  • கௌசிக் தர்பா - அபி
  • குர்சாகுன் கவுர் சச்சுதேவா - பத்து
  • சாரா ஷா - லட்சுமி
  • ராஷ்மி சாஸ்திரி - சத்யா
  • சுரேகா வாணி
  • காவ்யா - சின்னி
  • நவீன் - ராக்கேஷ்
  • விஜய் தேவராகொண்டா - அஜய்
  • சஞ்சீவ்
  • ஸ்ரீராம்
  • ஸ்ரீமுகி
  • சரண் அகுலா - மணீஷ்

பாடல்கள்

[தொகு]
லைஃப் இஸ் பியூட்டிஃபுல்
இசைக்கோவை
வெளியீடு27 சூலை 2012 (2012-07-27)
ஒலிப்பதிவு2012
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
நீளம்31:57
இசைத்தட்டு நிறுவனம்ஆதித்யா மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்மிக்கி மேயர்
மிக்கி மேயர் காலவரிசை
'அனகனகா ஓ தீருடு
(2011)
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் 'ரொட்டின் லவ் ஸ்டோரி
(2012)

மிக்கி ஜே மெயர் இசையமைத்துள்ளார். பாடல்களை அனந்த ஸ்ரீராம், வனமாலி ஆகியோர் எழுதியுள்ளார். [6]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "லைஃப் இஸ் பியூட்டிபுல்"  அனந்த ஸ்ரீராம்கே.கே 05:21
2. "பியூட்டிபுல் கேர்ள்"  வனமாலிகார்த்திக் 04:40
3. "அடு இடு ஓகுது"  அனந்த ஸ்ரீராம்மைனம்பட்டி ஸ்ரீராம் சந்திரா 05:28
4. "இட்ஸ் யுவர் லவ்"  அனந்த ஸ்ரீராம்நரேஷ் ஐயர் 05:08
5. "அம்மா அனி கொத்தகா"  வனமாலிசசிகிரண், சரவண பார்கவி 05:47
6. "லைஃப் இஸ் பியூட்டிபுல் - பாப் இசையில்"  அனந்த ஸ்ரீராம்ஸ்ரீராம் சந்திரா 05:34
மொத்த நீளம்:
31:57

விருதுகள்

[தொகு]
விழா விருதின் வகை பரிந்துரைக்கப்பட்டவர் முடிவு
60வது தென்னிய பிலிம்பேர் விழா சிறந்த துணை நடிகைக்கான விருது அமலா வெற்றி
சினிமா அவார்ட்ஸ் சிறந்த நடிகை அமலா அக்கினேனி வெற்றி
இரண்டாவது தென்னிந்திய திரைப்பட விருதுகள் (சுருக்கமாக ”சீமா”) சிறந்த பாடலாசிரியருக்கான ”சீமா” விருது வனமாலி ("அம்மா அனி கொத்தகா" என்ற பாடலுக்காக) பரிந்துரை
சிறந்த நடிகைக்கான ”சீமா” விருது குர்சகன் கவுர் சச்சுதேவ் பரிந்துரை

சான்றுகள்

[தொகு]
  1. "Sekhar Kammula's "Life is Beautiful" USA schedules". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-12.
  2. http://movies.infoonlinepages.com/movie-collections-tollywood/life-is-beautiful-17-days-collections.html
  3. "SVSC Muhurat".
  4. "Shriya in Kammula's Life Is Beautiful".
  5. "News : Amala Akkineni makes comeback". Telugucinema.com. Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2013-01-12.
  6. "Life Is Beautiful track list". Telugu.way2movies.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-12.

இணைப்புகள்

[தொகு]