லோக்தந்திரிக் ஜனதா தளம் | |
---|---|
சுருக்கக்குறி | LJD |
தலைவர் | சரத் யாதவ் |
தலைவர் | பதேக் சிங் |
நிறுவனர் | சரத் யாதவ் |
தொடக்கம் | 18 மே 2018 |
கலைப்பு | 20 மார்ச் 2022 |
பிரிவு | ஐக்கிய ஜனதா தளம் |
இணைந்தது | இராச்டிரிய ஜனதா தளம் |
தலைமையகம் | இ. எண் No. 861 P, பிரிவு-15, பகுதி–II, குருகிராம், குர்கான் மாவட்டம், அரியானா - 122001 |
இளைஞர் அமைப்பு | ஜனநாயக இளைஞர் ஜனதா தளம் |
கொள்கை | சமூகவுடைமை[1] முல்னிவாசிசம்[2] பகுசனிசம்[3] |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை, இடதுசாரி |
இ.தே.ஆ நிலை | பதிவு பெற்ற அங்கீகாரமற்ற கட்சி |
இணையதளம் | |
loktantrikjanatadal | |
இந்தியா அரசியல் |
லோக்தந்திரிக் ஜனதா தளம் (லோஜத) என்பது இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். இது மே 2018-ல் ஷரத் யாதவ் மற்றும் அலி அன்வர்[4] ஆகியோரால் தேசிய அளவில் தொடங்கப்பட்டது. பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியின் காரணமாக யாதவ் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்து இந்த கட்சி உருவாக்கினார். இக்கட்சி 20 மார்ச் 2022 அன்று இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது.
பாம்செப்-ன் அரசியல் பிரிவான பகுசன் முக்தி கட்சி லோக்தந்திரிக் ஜனதா தளத்துடன் இணைக்கப்பட்டது.[5][6] பகுஜன் முக்தி கட்சியின் தற்போதைய தலைவராக பிரவேந்திர பிரதாப் சிங் உள்ளார்.[7] வீரேந்திர குமார் தலைமையிலான கேரள ஜனதா தளத்தின் வீரேந்திர குமார் பிரிவும் இக்கட்சியுடன் இணைந்தது.[8] தற்போது இக்கட்சிக்குக் கேரள சட்டமன்றத்தில் 1 பிரதிநிதி உள்ளார்.
2022 மார்ச் 20 அன்று லோக்தந்திரிக் ஜனதா தளம் இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை முன்வைக்க, முன்னாள் ஜனதா தளம் பிரிவுகள் மற்றும் இதே போன்ற கொள்கைகளைக் கொண்ட பிற கட்சிகளை மீண்டும் இணைக்கும் பணியை சரத் யாதவ் மேற்கொண்டார்.[9][10][11]